Earth & Environment Read in english

புவியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றது

By Niroshan Thillainathan on May 16th, 2014

புவியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றதுஒரு நாள் என்றால் என்ன? நமது புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஒரு நாள் என்று கூறுகின்றோம். ஒரு முறை சுற்றுவதற்கு 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் எடுக்கின்றது. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? பகல் பொழுதுகள் சிறிது சிறிதாக நீண்டு கொண்டே இருக்கிறது. உலகம் தோன்றிய பொழுது ஒரு நாள் எவ்வளவு மணி நேரம் கொண்டது என்பதை உங்களால் யூகிக்க முடியுமா?  இரவும் பகலும் சேர்ந்து வெறும் 6 மணி நேரம் மட்டுமே தான்! 400 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு நாள் 21 மணி நேரம் கொண்டதாக இருந்திருக்கிறது. அப்படி என்றால் அந்நேரம், ஒரு வருடம் 410 நாட்கள் கொண்டிருந்தது. 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர்களுக்கு ஒவ்வொரு நாளும் 23 மணி நேரங்கள் நீடித்தது.

சுமார் 530 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமி இப்பொழுது சுழல்வதை விட வேகமாக சுழன்று கொண்டு இருந்தது. அப்பொழுதும் வருடத்தின் நாட்கள் இப்பொழுது போலவே இருந்தது. ஆனால் பகல் பொழுதுகள் அதிகமாக இருந்தது. பல நம்பத்தகுந்த ஆதாரங்களின் படி பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், கவலைப் படாதீர்கள், நமது பூமி ஒரு போதும் முற்றிலும் சுழல்வதை நிறுத்திவிடாது. அதற்கு முதல் நமது சூரியன் நமது உலகை அழித்துவிடும். அது ஏன் என்பதையும் நான் முன்னொரு அறிவு டோஸில் எழுதி இருந்தேன். எனவே, ஒன்றும் கவலைப் படாமல் இன்றைய நாளை மிகவும் சந்தோஷமாகக் கழியுங்கள் நண்பர்களே!


English Version

The earths rotation is slowing down


What is a day? We call the time taken by the Earth to complete one rotation on its axis as one day. The Earth takes 23 hours 56 minutes and 4 seconds to complete one rotation. But do you know something fascinating? The mornings are getting longer and longer. Can you imagine the duration of a day when the Earth came into existence? It was just 6 hours including the duration of both day and night!  400 million years ago, one day had 21 hours. It means that, 400 million years ago, 1 year comprised of 410 days. The days at the time of Dinosaurs which lived 100 million years ago, was made of 23 hours.

About 530 million years ago, the Earth was rotating at a greater speed than now. So, the days were similar to that of the present day. But the mornings were longer. According to reliable evidences the rotating speed of Earth is decreasing. But don’t worry! Our Earth will never stop rotating. Before that, the Sun will destroy the Earth. I have told you about this in another Arivu Dose earlier. So, have a happy day without worrying about the future!


Dna-webmaster | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

12 Comments

  • A.K.M Bharadan tamilan - 11/12/2014, 12:03 PM

    Information Super..

  • Mahendraselvan D. - 11/11/2014, 9:46 PM

    தகவல் நன்று.

  • Guruprasad - 11/11/2014, 3:58 PM

    Your post are very useful information

  • prakash - 11/11/2014, 1:59 PM

    Nice ….

  • Mohan Raj - 05/19/2014, 3:55 PM

    thanks sir

  • Jai Prabu - 05/17/2014, 9:06 AM

    Thks

  • Bk Cool - 05/17/2014, 8:28 AM

    Nice

  • Shalini Love - 05/17/2014, 3:46 AM

    Super

  • Judy Arul - 05/17/2014, 12:59 AM

    I am confuse as usual

  • Karthi Karthi - 05/16/2014, 4:38 PM

    Thaxs

  • Gánésh Jaï - 05/16/2014, 3:45 PM

    Super news bro ….

  • Siva D Don - 05/16/2014, 2:04 PM

    Social booklatha epdi koltrainganu vantha face booklaiuma? So sad…