Astronomy Read in english

உண்மையில் சூரியன் வெள்ளை நிறமானது

By Niroshan Thillainathan on October 4th, 2014

உண்மையில் சூரியன் வெள்ளை நிறமானதுஉங்கள் குழந்தைப் பருவத்தில், பள்ளியில் நடந்ததை நினைத்துப் பாருங்கள். சூரியனுக்கு வண்ணம் தீட்டச் சொல்லும் போது எந்த நிறத்தைப் பயன்படுத்தினீர்கள். அனைவரும் மஞ்சள் நிறத்தினைத் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறு. சூரியனின் உண்மையான நிறம் “வெள்ளை” மட்டுமே. நாம் இருக்கும் பூமியிலுள்ள வளிமண்டலத்தினால் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. நாம் பார்க்கும் இடங்கள் மற்றும் வளிமண்டலத்தினைப் பொறுத்து நட்சத்திரங்கள் வெவ்வேறு நிறங்களில் தெரியும். ஆனால் அவற்றின் உண்மையான நிறம் வேறுமாதிரி இருக்கும்.

ஓரளவு குளிர்ச்சியாக மற்றும் 3500 கெல்வின் வெப்பநிலையில் உள்ள நட்சத்திரங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். 10,000 கெல்வினுக்கு மேல் வெப்பநிலையில் உள்ள நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இருக்கும். நமது சூரியன் சுமார் 6000 டிகிரி கெல்வினில் உள்ளது, இதன் அர்த்தம் அது கண்டிப்பாக வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும் என்பதுதான்.

அது சரி, இந்த விடயம் உங்களில் யாருக்கு முன்பே தெரிந்தது ஆகும்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

The Color of the Sun is White


Try to recall your childhood memories at school. What color did you use to paint the Sun? Isn’t it yellow, always? But that is totally wrong. Actually the color of the Sun is White. We perceive it as yellow due to the Earth’s atmosphere. Depending upon our position and the atmosphere, the stars appear in various colors. But their actual color will be quite different from what we observe. The stars with low temperature and those at 3500 Kelvin temperature appear in red color. Stars with a temperature of more than 10,000 Kelvin appear in blue color. The temperature of our Sun is around 6000 Kelvin which means that the color of the Sun can be nothing but white.

Do you know this interesting fact before reading this Arivu Dose? Post your comments below.


Kreuzschnabel | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • s.premnath - 10/12/2014, 4:21 AM

    How to improve the momery power