Social Sciences Read in english

உலகின் மிகப்பெரிய குடும்பம்

By Niroshan Thillainathan on October 17th, 2014

உலகின் மிகப்பெரிய குடும்பம்நம்முடைய வாழ்க்கை முறையும், குடும்ப வாழ்க்கையும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. அந்தக் காலத்தில், நமது முன்னோர்கள் வீட்டில், குறைந்தபட்சம் 4 முதல் 8 குழந்தைகள் வரை இருந்தனர். பின்னர் படிப்படியாகக் குறைந்து ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற நிலையில் தற்போது இருக்கிறோம். ஆனால் இன்றும் இந்தியாவில் உள்ள ஒரு குடும்பத்தில் 181 பேர் இருக்கிறார்கள் என்றால் அதை நம்புவீர்களா?

இந்தியாவிலுள்ள சியோனா சானா என்பவரின் வீட்டில் தான் இத்தனை பேர் குடும்பமாக வசிக்கின்றனர். இவரின் குடும்பத்தினர் முழுவதும், நூறு அறைகளைக் கொண்ட ஒரே வீட்டில் வசிக்கின்றனர் என்பது மற்றுமொரு ஆச்சரியம். சியோனாவின் மதத்தில் எத்தனைத் திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று உள்ளதால், மணப்பெண்களின் சம்மதத்தின் பேரில் பல திருமணங்களைச் செய்யத் தொடங்கினார். ஒரு வருடத்திற்குள்ளேயே பத்து திருமணங்களை வெற்றிகரமாகச் செய்த இவர், தற்போது 39 மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அனைத்து மனைவிகளும் ஒரு பிரம்மாண்டமான தங்குமிடத்தில் ஒன்றாகத் தங்குகின்றனர். சாதாரணமாக ஓர் இரவு மட்டும் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு 30 கோழிகள், 132 பவுண்ட் உருளைக்கிழங்கு மற்றும் 220 பவுண்ட் அரிசி செலவாகுமாம்.

என்ன நண்பர்களே, இதைப் படித்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? அதைக் கட்டாயம் ஓர் கருத்தாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

The biggest family in the world


Our social and family lifestyles are changing day by day. In olden days, there were 4 to 8 children in each home. It got reduced progressively to “we two, ours one”. But still, there is an Indian family with 181 family members. Can you believe it?

Siyona Sana’s family in India is the one with so many family members. All his family members are living together in a house with 100 rooms. As Siona’s religion accepts polygamy, he has married many times with the consent of the brides. Successfully married 10 times in a year, he is now living happily with 39 wives. All the wives live together in a gigantic room. Their average dinner consist of 30 chicken, 132 pound potato and 220 pound rice. What comes to your thought on reading this Arivu Dose?

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Ojedamd | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.