Astronomy Read in english

எவரெஸ்டை விட உயரமான மலை

By Niroshan Thillainathan on December 27th, 2014

Tallest Mountain in the solar systemஇந்த உலகில் உயரமான மலை எது என்று கேட்டால், அது நிச்சயமாக எவரெஸ்ட் மலை என்று தான் எல்லோருமே கூறுவார்கள். சரி, அது இருக்கட்டும், ஆனால் இதுவே நமது சூரிய குடும்பத்தில் உயரமான மலை எது என்று கேட்டால், அதற்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? பதில் தெரியவில்லை என்றால், கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள், நண்பர்களே!

ஒலம்பஸ் மோன்ஸ் என்பது பிரபலமான செவ்வாய் கோளில் இருக்கும் மலைகளுள் ஒன்று. இது அளவில் எவரெஸ்ட் சிகரத்தினை விட பெரியது. 21,900 மீட்டர் (71,800 அடி) அளவுடைய இந்த எரிமலை சூரியக் குடும்பத்திலேயே மிகவும் உயரமான மலையாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பின்பு சூரியனைச் சுற்றிவரும் மிகவும் சிறிய கோளான வெஸ்டாவில் இதைவிட பெரிய மலை கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெசில்வியா’ என்றழைக்கப்படும் இந்த மலையின் உயரம் மோன்ஸ் மலையினை விட வெறும் 100 மீட்டர் தான் அதிகம்.

இந்த அளவீடுகள் அந்தளவிற்குத் துல்லியம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் தற்போதைய கணக்கின்படி ரெசில்வியா மிகவும் பெரிய மலையாகக் கருதப்பட்டு வருகிறது. வெஸ்டாவிற்கு செலுத்தப்பட்ட விண்கலம் 2011 வரை செய்த ஆய்வில் இந்த மலையானது மிகப்பெரிய பள்ளத்திலிருந்து உயரமாக உள்ளது கண்டறியப்பட்டது. இந்த பள்ளத்தின் விட்டம் மட்டும் 505 கிலோ மீட்டர் (314 மைல்) இருக்குமாம்.

நமது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைப்பதற்கே பல ஆண்டுகள் ஆன நிலையில் அதை விட பெரிய மலைகள் என்றால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே வியப்பாக இல்லையா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

 


English Version

Tallest Mountain in the solar system


If someone asks about the tallest mountain in the world, all of us will say Mount Everest. Do you know the tallest mountain peak in our solar system? If you don’t know, learn in this Arivu Dose.

Olympus Mons is one of the famous mountains in the Mars. It is larger than Mount Everest. This volcano of height 21,900m (71,800 f) was considered as the tallest mountain in the solar system. But later, a taller mountain was found in the Vesta, the smallest planet revolving around the Sun. This mountain called Rheasilvia is taller than the Mons Mountain by just 100 metres. Although the measurements are not accurate, Rheasilvia is considered to be the tallest mountain now. The satellite sent to the Vesta conducted its studies till 2011 and based on that, the mountain arises from a pit whose diameter measures about 505 km (314 miles). It has taken so many years to climb the Mount Everest and set a record. Can you imagine how long it will take to climb these mountains? Isn’t it surprising? Post your comments about this Arivu Dose below.


ASA/JPL/Cornell | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.