Natural Sciences Read in english

இன்பத்தாலும், துன்பத்தாலும் ஏற்படும் இறப்பு

By Niroshan Thillainathan on September 20th, 2014

இன்பத்தாலும், துன்பத்தாலும் ஏற்படும் இறப்புதிடீரென ஏற்படும் இன்பத்தினாலோ அல்லது துன்பத்தினாலோ உண்டாகும் அதிர்ச்சியினால், மனிதனின் இதயம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சில வேளைகளில் இதனால் இறக்கக்கூட நேரிடலாம். இதற்கு டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy) என்று பெயர். என்னடா இது வாயில் வராத பெயராக இருக்கிறதே என்கிறீர்களா? அதற்காகத் தான் இதனை “உடைந்த இதயத்தின் நோய் (broken heart syndrome)” என்றும் கூட கூறுகின்றனர்.

இது வலுவிழந்த இதயத் தசைகளால் ஏற்படுகிறது. நமக்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை வெறுக்கும் போது, நம்மைவிட்டு அவர்கள் விலகும்போது அல்லது அவர்கள் இறக்கும்போது ஏற்படும் தொடர் மன அழுத்தத்தினால் இவ்வாறு ஏற்படும். இதனால் தான் இதனை உடைந்த இதயத்தின் நோய் என அழைக்கின்றனர்.

இதயத்திற்கு அதிக துன்பம் அல்லது இன்பம் ஏற்படும் போது இது அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக லாட்டரியில் பணம் அதிகம் விழுந்ததை ஒருவர் கேட்கும்போது அதிகபட்ச மகிழ்ச்சியால் அவரது உடலின் அட்ரினலின் எழுச்சிபெறும், இதனால் இதயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இத்தகைய நோய்களால் இறப்பது மிகவும் குறைவு என்றாலும், இவை தான் முன் கூட்டியே நடக்கும் என தீர்மானித்து நடக்கும் சில செயல்களின் மூலம் இவற்றைக் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வாழ்வில் எது அதிகம் இருந்தாலும் நமக்கு பிரச்சனைதான் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை என்றாலும், அதை விஞ்ஞானிகள் கூறினால் தான் நாம் கேட்போம் என்பது தான் நடைமுறை வாழ்க்கை. என்ன நண்பர்களே, இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் எண்ணங்களைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Takotsubo Cardiomyopathy - The Broken Heart Syndrome


Scientists have discovered that sudden intense emotions like happiness or grief can shock the human body in such a way that it leads to a fatal heart condition. Such condition is scientifically termed as “Takotsubo Cardiomyopathy” or widely known as the broken heart syndrome. This syndrome is mainly caused by the heart’s reaction to a surge of stress hormones, caused by death of a loved one, ignorance by the dearest one or in a situation of being hated by someone we love unconditionally. Consequently, one’s heart muscles can be weakened in such a way  that this could even lead to death. Apart from that, startling revelations can pose a danger to the heart, whether the news is happy or sad. The rush of adrenaline, caused by a sudden happy message, for instance by hearing the news of winning a lottery ticket worth of 10 million dollars, can lead to this syndrome. In a nutshell, anything beyond its limit, whether it is good or bad, will most probably have negative effects in life. Therefore, we should always learn to live a life at a balanced level, emphasizing the perfect amount of everything, including emotions like happiness or sadness.

What are your views on this? Do you agree with the idea of living a life at a balanced level? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Samael Kreutz from Concepción | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

  • Rajan King Nadar - 09/21/2014, 7:56 PM
  • Vadivelu Dheenadayalan - 09/21/2014, 6:43 PM

    Nice lines

  • Rajini Senthil Vel - 09/20/2014, 8:51 PM
  • Yoo Yogesh - 09/20/2014, 5:59 PM

    Super tnxxxx baby

  • Lokesh Shiva - 09/20/2014, 5:55 PM

    final semester la all clear pannalum varum..

  • Fayas Ahamed - 09/20/2014, 5:46 PM

    I knew that an enzyme will affected when we suffered by anxiety. Thanks for ur information.

  • Ganesh Ram - 09/20/2014, 5:12 PM

    seththu tholaivom

    • Rajini Vinoth - 09/22/2014, 7:14 AM

      super sir ..

    • Jakkan Balakrishnan - 09/20/2014, 7:05 PM

      கரெக்ட்டு…factu…

  • Premalatha Premalatha - 09/20/2014, 5:05 PM

    Life ellame anupavama eduthukanum.