Technology Read in english

பக்கவாத நோயும் எந்திரக் கையும்

By Niroshan Thillainathan on April 30th, 2014

பக்கவாத நோயும் எந்திரக் கையும்கடந்த 15 ஆண்டுகளாகப் பயங்கரமான பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் பெண்மனி ஒருவர், தற்பொழுது சுயமாகக் காப்பியை அருந்தும் நிலையை அடைந்துள்ளார். அது எப்படி என்று கேட்கின்றீர்களா? “Robotic arm” அல்லது எந்திரக் கையைத் தன் மூளையைக் கொண்டு இயக்குவதன் மூலம் அவரால் சுயமாகச் சில வேலைகளைச் செய்ய முடிகின்றது. பக்கவாத நோய் வந்ததில் இருந்து எவ்வித அசைவையும், வேலையயும் செய்ய இயலாத இவரின் மூளையின் இயக்கப் புறணியினுள் (Motor Cortex) சிறு மாத்திரை அளவிலான கருவியொன்றை சில மில்லிமீட்டர் ஆழத்திற்கு மருத்துவர்கள் நட்டனர்.  96 சிறு மயிரிழை மின்முனைகளை உள்ளடக்கிய இந்தக் கருவி, அந்தப் பெண்மணியின் நரம்பு மண்டலத்தை இயக்கும் வல்லமையைப் பெற்றது. எனவே, இந்தக் கருவி, அந்தப் பெண்மணியின் செயலிழந்த கையில் பொருத்தப் பட்டிருக்கும் எந்திரக் கையை அவரின் தேவைக்கேற்ப அசைக்க வைக்கின்றது. சுருக்கமாகக் கூறினால், தன் கையைக் கொண்டு ஒரு பொருளைப் பிடிக்க வேண்டும் என்று இவர் எண்ணும் பொழுது, இதற்கான சமிக்ஞை மூளையில் நடப்பட்டிருக்கும் கருவியைச் சென்றடையும். அதன் பின், தன் உடலில் பொருத்தப்பட்டுள்ள எந்திரக் கை சமிக்ஞைக்கு ஏற்றவாறு அசைந்து கொடுக்கும். பக்கவாத நோயாளிகளுக்கு மறுவாழ்வைக் கொடுக்க வல்ல இந்த ஆராய்ச்சியை இதனோடு நிறுத்திவிடாமல் அமெரிக்க அறிவியலாளர்கள் இன்னும் பல வழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய அறிவியல் உலகில் எவ்வளவோ செய்யக்கூடியதாக இருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் மனிதர்களால் முடியும் என்பதைக் கற்பனை கூட பண்ணமுடியவில்லை! பொறுத்திருந்து பார்ப்போம்!


English Version

Stroke patients with robotic arm


A woman who was suffering from severe stroke has attained the ability to drink coffee by herself. Are you surprised?  She is able to do some physical activities by using the “Robotic arm” by controlling it with her brain. The Doctors implanted a small device at few millimeters deep in the motor cortex of the brain of this stroke patient who was unable to move. This device contains 96 fine hair like electrical tips which has the ability to control her nervous systems. This device helps to move the robotic arm which has been fixed in the paralyzed hand. For example, when she thinks to catch an object, the signals from her brain will reach this device at that moment. Then the robotic arm will move according to the signal. The American scientists are proceeding with this research to upgrade this invention which gives life to the people affected by stroke.

The recent scientific advances have made many things possible. Its rapid advancement is highly unimaginable. Let’s wait and watch!


Crispin Semmens | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.