Future Sciences Read in english

வாங்கள் விண்வெளி போகலாம்

By Niroshan Thillainathan on February 12th, 2014

வாங்கள் விண்வெளி போகலாம்„அப்பா, அடுத்த பள்ளி விடுமுறைக்கு எங்கே போவோம்?“ என்று உங்கள் பிள்ளைகள் உங்களிடம் கேட்கும்போது நீங்கள் என்ன கூறுவீர்கள்? வெளி ஊர் போகலாம் அல்லது வெளிநாடு போகலாம் எனச்சொல்லி உங்கள் பிள்ளைகளை மகிழ்விப்பீர்கள். ஆனால், எப்போதாவது விண்வெளிக்குப் போகலாம் என்று கூறி இருக்கிறீர்களா? இல்லை தானே…? எதிர்காலத்தில் அப்படியும் தந்தைமார் சொல்வார்கள்!

அதுவும், நீங்கள் நினைப்பது போல் ராக்கெட்டில் பயணிப்பதில்லை! இதற்கென்றே அமைக்கப்பட்ட ஓர் உயர்த்தி (Elevator) ஊடாக பூமியின் தரையில் இருந்து 80.000 km மேல் நோக்கி சென்று அங்கே ஜாலியா ஒரு சோடா குடித்துவிட்டு மறுபடியும் புவியை நோக்கிச்செல்லலாம்.

நீண்ட காலமாக இப்படி ஓர் உயர்த்தியை கட்டுவதற்கு சாத்தியம் இல்லை என்று எண்ணி, நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் இந்த உயர்த்தியை இயக்க உதவும் கேபிள்கள் அறுந்துவிடுவன என நிச்சயமாக சொல்லிவிட்டார்கள். ஆனால், நவீன ஆராய்ச்சி படி கார்பன் நானோகுழாய்களின் (Carbon nanotube) உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்பது தெரியவந்தது. தற்போது விஞ்ஞானிகளால் ஒரு சில சென்டிமீட்டர் கார்பன் நானோகுழாய்கள் தான் உருவாக்க முடிந்தது. ஆனால், கொஞ்சக் காலம் கடந்து 2070ம் ஆண்டிற்கு பின்பு இப்படி ஒரு உயர்த்தியை நிச்சயம் கட்ட முடியும் என்பதை கூறியிருக்கிறார்கள்.

ஆகவே… „டேய் மச்சான் வா விண்வெளிக்குச் சென்று ஒரு காப்பி குடித்துவிட்டு வருவோம்“ என்று எதிர்காலங்களில் கேட்கத்தான் போகிறார்கள். ஆனால், நாமலும் கேட்போமா என்று தான் தெரியவில்லை. ஏன், எனக்கே அந்நேரம் 80 வயதைத் தாண்டிவிடும். இதை எல்லாம் அனுபவிக்க நான் கூட இருப்பேனோ தெரியவில்லை… :-P.

நண்பர்களே, இப்படி ஓர் உயர்த்தியில் நீங்கள் பயமில்லாமல் விண்வெளிக்கு சென்று பார்ப்பீர்களா? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Space Elevator would be built very soon


What will be your reply when your kids ask about your next tour destination? You would say that you plan to go abroad and visit exotic places. But you wouldn’t say that you would take them to outer space. In the near future, dads will do so. As you may think, you need not to travel in a rocket. You can travel in an elevator, which will take you to 80,000 km above earth, have a cup of coffee and get back down to earth.

For a long time, it was believed that it is impossible to build such an elevator as the cords would snap based on Newton’s laws of motion. But recent researches have proved that it is possible to implement this plan by using carbon nano tubes. At present, scientists are able to build nano tubes a few centimeters of length. It is said that building such an elevator will be a reality after 2070. I am not sure if I will be able to travel in that elevator as I will be around 80 years old or may be dead.

But what about you? Will you be scared to travel to such great height in an elevator? Share your thoughts and opinions with me by dropping a comment below.


NASA | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

18 Comments

 • Sriram - 08/19/2014, 4:40 PM

  நேற்று (50 வருடத்துக்கு முன்னால்) தொடு திரை கணினியை யாரும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று அது மனிதனோடு ஒன்றிய ஒரு விஷயம். 50 ஆண்டுகளுக்கு முன்னாலும் தொடு திரை கணினி என்று ஒன்று இருந்தது. அதை கண்டு பிடிக்க இத்தனை நாட்கள் ஆனது. அதே போல் ஓர் உயர்த்தி மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டு அது மக்களின் நடை முறைக்கு வரும் நாள் வெகு தூரம் இல்லை. மனிதன் இன்னும் 300 ஆண்டுகளில் பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்று விட்டு வரும் வழியையும் கண்டு பிடித்திருப்பான்.

 • Siva Guru - 07/22/2014, 6:09 AM

  Kantipa,Uyirotu erutha …..,

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/17/2014, 2:24 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Villan Rashik D R நல்ல தோழி ஜோதி Raju Arun Mathan Kumar Bala Sekar Thavam Kc Jeyakodi KattaPechi Ajith Kumar Era Siva Prakash Cyril Thala Rajan J Rajan Gayathri Magudeeswaran

 • Raju Arun - 07/17/2014, 7:49 AM

  savama iruntha pakalam

 • Mathan Kumar - 07/17/2014, 4:48 AM

  ஒயின் ஷாப் இருக்குமா?

 • Bala Sekar - 07/17/2014, 4:07 AM

  Nice…

 • Thavam Kc - 07/16/2014, 4:46 PM

  Kovil

 • Jeyakodi KattaPechi - 07/16/2014, 2:14 PM

  Kancha kudichu par ippavey angavenumanulum pogalam

 • Ajith Kumar Era - 07/15/2014, 3:15 PM

  2030 kulla intha elevator vanthurum…..

 • Siva Prakash - 07/15/2014, 2:50 PM

  Poga mudinja super!

 • Cyril Thala - 07/15/2014, 2:35 PM

  Naangala chinna vayasulaye rocketla paranthutom ya…

 • நல்ல தோழி ஜோதி - 07/15/2014, 1:44 PM

  80 வயதானாலும் என்னால் பார்க்க முடியும்

 • Rajan J Rajan - 07/15/2014, 1:40 PM

  naan illa intha vilayattuku.

 • Villan Rashik D R - 07/15/2014, 1:40 PM

  Adhuku en 2070 varaikum wait pannanum go to tasmac take one fullu apdiye oru kutti sleepu then fly in moonu,,

 • Gayathri Magudeeswaran - 07/15/2014, 1:19 PM

  sema plan.

 • Kalairaj Kalai - 07/15/2014, 1:14 PM

  unaku age ena admin

 • திவாகர் ரகுநாதன் - 03/05/2014, 8:22 AM

  இன்றைய கற்பனை நாளைய நிஜம் போல இருக்கு

 • Sri Priya - 03/04/2014, 1:31 PM

  Konjam payam but niraya expectation irukkum…ninaichale amazing ah irukku………..