Natural Sciences Read in english

நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்

By Niroshan Thillainathan on September 26th, 2014

நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்உலகில் சில உயிரினங்களின் உண்மையான நோக்கம் என்னவென்றே இன்றளவும் நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக நத்தையினைக் கூறலாம். மிகவும் மெதுவாக செயல்படும் ஒரு சிலரைப் பார்த்தால் கூட நமக்கு நத்தையின் ஞாபகம் தான் வரும். அந்தளவிற்கு மெதுவாக செல்வதில் பேர்போன இந்த நத்தை, உயிர் வாழ்வதற்கு ஈரப்பதமான சூழ்நிலை தேவை. இதற்காகத் தான் அவை இயற்கையிலே ஈரப்பதத்தினைத் தக்கவைத்துக்கொள்ளும் தகவமைப்புடன் உள்ளன.

சில உயிரினங்கள் பகல் முழுவதும் உறங்கிவிட்டு இரவில் மட்டும் புத்துணர்ச்சியுடன் நடமாடுகின்றன. இதிலும் ஒரு சில உயிரினங்கள், சில ஆண்டுகாலம் மட்டுமே உயிர்வாழும், அதனால் தகுந்தளவிற்குக் கூட அவை உறங்குவதில்லை. சுற்றுப்புறத்திலுள்ள குளிர்ச்சியான அல்லது வெப்பமான சூழ்நிலைகளைப் பொறுத்து ஒரு சில வகையான நத்தைகள் நீண்ட காலம் வரை உறங்குகின்றன. அதிலும் சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட உறங்குகின்றன. இத்தகைய உயிரினங்கள் 15 ஆண்டுகள் வரை கூட வாழும் திறன் படைத்தவை.
மூன்று வருடங்கள் தூங்குவது என்பதைக் கேட்கவே நம்பமுடியவில்லை அல்லவா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? உங்கள் எண்ணங்களைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Snails can Sleep for 3 Years


The reasons for the existence of some creatures are still unknown, which makes them sort of mysterious to humans. One of the best examples for such creature  are snails. Snails need a moisture environment to live and thus it has the ability to moisturize itself naturally. On the other hand, some organisms only stay up during night time and sleep throughout day time. Furthermore, some organisms will sleep less, because they have a short life span.    In addition, some types of snails decide their sleeping period depending on the changes in their environmental temperature. One of the examples are desert snails, which sleep for 3 years continuously underground, and are capable of living for 15 years.

Don’t you think these living organisms are unique? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Zachi Evenor | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.