Natural Sciences Read in english

உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்தால் அது உங்களைக் கொல்லும்

By Niroshan Thillainathan on October 18th, 2014

உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்தால் அது உங்களைக் கொல்லும்பெற்றோர்கள் தங்களது ஆற்றல் மிக்க குழந்தைகளிடம் அடிக்கடி சொல்வது ”ஒரு இடத்தில் அமைதியாய் இரு” என்று. ஆனால் அவர்கள் அதைக் கேட்பதில்லை. அதுவும் ஒருவகையில் நல்லது தான், ஏனென்றால் உடல் உழைப்பு அல்லது உடலால் வேலைகளைச் செய்யாமல் இருப்பதால் இறப்புகள் முன்கூட்டியே ஏற்படுவதாகப் பொதுவான கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அபாயங்கள் ஓர் நாளுக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் இருந்த இடத்திலே இருந்துகொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் பொருந்தும். பெரும்பாலான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இதற்கு ஆளாகின்றனர். ஒரு நாளுக்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் இவ்வாறு வேலை செய்பவர்களுக்கு மன அழுத்தம், நீரிழிவு நோய், குடல் புற்றுநோய் மற்றும் பிற செயல்கள் மீதான குழப்பங்கள் போன்றவை ஏற்பட 40 சதவீதம் அதிக வாய்ப்புள்ளது.

இதற்கான எளிமையானத் தீர்வு உடற்பயிற்சி தான். வாரத்திற்கு நான்கு மணி நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்பவர்கள் கூட நோயின்றி வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. அதனால் உடனே உங்கள் உடற்பயிற்சியினைத் துவங்குங்கள், நண்பர்களே!

உடற்பயிற்சி நமது முக்கியத் தேவைகளுள் ஒன்று என்பதை மறந்துவிடாதீர்கள்! நீங்கள் உடற்பயிற்சி செய்வது உண்டா? உங்கள் பதில் மற்றும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

Sitting is killing you


Doing a job without moving away from your seat will kill you. Parents often tell their active children, “Sit quietly”. But children never listen. It is good, in a way. It is a general opinion that being idle or staying sedentary without doing any physical work, can cause early death. The dangers associated with it are more appropriate for people who do a sedentary job for about 5 hours a day. There are 40% chances of getting high blood pressure, diabetes mellitus, colon cancer and confusion about other functions, for people who work, sitting in the same place for about 4 hours a day.The easiest solution for this problem is nothing but physical exercise. There is a good chance of leading a healthy life for people who exercise for about 4 hours a week. So, start doing exercise regularly.

Don’t forget that exercise is an important need for a healthy life. Do you exercise regularly? Post your answers and comments about this Arivu Dose below.


Foundation7 | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.