Natural Sciences Read in english

தன்னைத்தானே திரவமாக்கிக் கொள்ளும் கடலட்டை

By Niroshan Thillainathan on February 7th, 2015

Sea Cucumbers Liquefy Themselvesஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கு வித்தியாசமான வழிமுறைகளை மேற்கொள்ளும். அப்போதுதான் அவை தொடர்ந்து வாழ முடியும். இதே போல்தான் கடலட்டையும் தன்னை மற்ற விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு இரு வெவ்வேறு வழிகளைக் கையாளுகிறது. தனது உடலுறுப்பில் ஒன்றை வெளியேற்றிவிடுவது முதல் தற்காப்பு முறை ஆகும். பெரும்பாலான நேரங்களில் தனது அதிகப்படியான வயிற்றுப்பகுதியைத்தான் வெளியேற்றும். ஆனால் இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், அந்த வெளியிட்ட உறுப்பினை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் என்பது தான்.

இன்னொரு வழிதான் தன்னைத்தானே திரவம் போல் மாற்றிக்கொள்வது. அவற்றின் செல்களுக்கு இடையேயுள்ள பிணைப்பினைத் துண்டிப்பதன் மூலம் பிரிந்து அருவருக்கத்தக்க பகுதிகளில் சென்று மிதக்கத் தொடங்குகின்றன. பின்னர் சரியான இடமும் காலமும் அமைந்த பிறகு ஒன்றாக மாறித் திடப்பொருளாக மாறுகின்றன. இது திரவமான காலகட்டத்தில் நம்மால் அதைக் கையால் கூட எடுக்க முடியாது, எளிதாக திரவம்போல் தப்பியோடிவிடும். திட நிலையில் இருந்து தானாகத் திரவ நிலைக்கு மாறுவது உங்களுக்கு வியப்பினைத் தரவில்லையா?

இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கண்டிப்பாக கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Sea Cucumbers Liquefy Themselves


Every organism use various mechanisms to protect themselves from other organisms. It helps them to sustain their life. Sea cucumbers protect themselves from other organisms in the same way using two different mechanisms. The first protective mechanism is expelling one of its body parts. It usually expels its excessive gut. It is interesting to know that it regenerates the expelled body part later.

The second mechanism is the liquefaction. In this mechanism, the cell to cell bond gets broken and they get converted to disgusting pieces of dead organism. Later on, during the right time and in right place, they unite and solidify. During the period of liquefaction, it is really impossible to catch them in our hands as they slip away easily like a fluid.

Isn’t it interesting to know how an organism becomes a liquid? Post your comments about this Arivu Dose here.


laszlo-photo | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.