Natural Sciences Read in english

ஆய்வகத்தில் உருவாக்கிய உறுப்பினை விலங்கில் வளர்த்து அசத்திய விஞ்ஞானிகள்

By Niroshan Thillainathan on January 15th, 2015

Scientists Grow an Organ in an Animal from Cells Created in Labஇதயத்திற்கு அருகில் ‘தைமஸ்’ எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது. இது உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் வல்லமை படைத்தது. ஆனால் ஒரு சிலருக்கு இதில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது, அதனை சரிசெய்து அந்த உறுப்பிற்கு பதிலாக புதிய தைமஸ் உறுப்பினை அதே இடத்தில் பொருத்துவதன் மூலம் இதனை சரிசெய்யலாம் என ஆராய்ச்சியாளார்கள் நம்பினர்.

அந்த நம்பிக்கையில் அவர்கள் செய்த ஆராய்ச்சி, வெற்றியில் முடிந்துள்ளது. இதனை எலியின் மீது செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். எலியின் தைமஸ் உறுப்பிற்கு பதிலாக வேறொரு தைமஸ் உறுப்பினை அவர்கள் இடமாற்றினர். இந்த புதிய உறுப்பு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. உண்மையான உறுப்பினைப் போன்றே செயல்பாடுகள் மற்றும் பண்புகளைக் கொண்ட இந்த உறுப்பு எலியின் மற்ற உறுப்புகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் மனிதனின் மீது தொடரப்போகும் ஆராய்ச்சியும் வெற்றியடைந்துவிட்டால் பெரும்பாலான நோய்கள் குறைக்கப்பட்டுவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பிறப்பிலேயே இருந்தால் சரிசெய்ய இயலும் என்றாலும் அந்த உறுப்பினை வழங்க பிறர் முன்வராமல் உள்ளனர். அதனால் இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இப்படி ஓர் கண்டுபிடிப்பினால், இனி எந்த நோய் வந்தாலும் அதனை எதிர்த்துவிடலாம் என்று நம்பிக்கை வருகிறது அல்லவா? இது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Scientists Grow an Organ in an Animal from Cells Created in Lab


There is an organ called Thymus near the heart. This organ is capable of providing the immunity to our body against various diseases. Some people may have problems in this organ. Researchers believed that these problems could be solved by replacing it with a new Thymus.

This belief has led them to a research that has ended successfully. This research was conducted on mice. They have replaced the Thymus of the mice with another Thymus which was created in a laboratory. This organ which has all the features and functions similar to the natural organ has begun to function in an integrated manner with other organs of the mice.

Researchers say that if the researches on Humans become successful, the number of diseases affecting us will be greatly reduced. Although the diseases which are present from birth can be cured, people are not ready to donate the organ and this has led to this novel effort.

Don’t you feel that if such a development happens, it could help us fight any disease? Post your comments about this Arivu Dose below.


kaibara87 | Creative Commons by-2.0, via Flickr.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.