Natural Sciences Read in english

குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்

By Niroshan Thillainathan on September 28th, 2014

குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் வாழ்ந்த திபெத்தியர்கள் மற்ற மக்களைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவான ஆக்ஸிஜனில் உயிர்வாழ்ந்துள்ளனர். 87 சதவீத திபெத் மக்களிடம் காணப்படும் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்பினால், கடல்மட்டத்திலிருந்து அதிக உயரமான இடங்களில் கூட சாதாரணமாக வாழமுடியும் என்று தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஸ்மஸ் நீல்சன் இது பற்றி பின்வருமாறு கூறினார்: இது போன்ற ஜீன் அமைப்பு திபெத்திய மக்களின் உடலில் பொதுவாகக் காணப்படுகிறது, ஆனால் கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் வாழும் மக்களிடையே இத்தகைய ஜீன் அமைப்பு குறைவாகவே காணப்படுகிறது. மேலும் இந்த வகை ஜீன் பிறழ்ச்சி மிக வேகமாக நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடல் மட்டத்திலிருந்து உயர்வான இடங்களில் வாழும் மக்களிடம் வழக்கமாக, உடலின் திசுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த சிவப்பு செல்கள் அதிகமாகக் காணப்படும், ஆனால் திபெத் மக்களிடம் அவ்வாறு காணப்படவில்லை. இதற்கும் அவர்களின் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்புதான் காரணம். இந்த அமைப்பினால் தான் அவர்கள் காற்று குறைவான, அதாவது ஆக்ஸிஜன் குறைவான பீடபூமிப் பகுதிகளிலும் வாழமுடிகிறது. இப்படி ஜீன் அமைப்பு மாற்றமடைந்து வெறும் 2750 ஆண்டுகள் தான் ஆகிறதாம். மற்ற ஜீன் மாற்றங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான கால அளவு ஆகும்.

இது சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Scientists discover how Tibetan People can live at high Altitudes


The people of Tibet, who live in places above the sea level, use 40% less oxygen than other people. Recent researches say that the presence of EPAS1 gene in them helps them to live in places well above the sea level, comfortably. Mr.Rasmas Neilson, Professor at California University, says as follows: Generally, this genetic makeup is seen in the Tibet population. But it is less prevalent among the people living at a lower height. He also says that this genetic mutation has occurred so fast.

The people who live in places above the sea level have more number of red blood cells, which carry oxygen to the tissues. But it is not so with the people of Tibet. This is due to the presence of the EPAS1 gene. This makes them capable of living in places with low oxygen level. This change in the genetic makeup, which has happened in the past 2750 years. This is very less time when compared to other mutations. Isn’t it interesting? Post your comments below.


Antoine Taveneaux | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.