Behavioural Sciences Read in english

அதிகம் சலித்துக்கொண்டால் ஆயுள் குறையும்!

By Niroshan Thillainathan on July 10th, 2014

அதிகம் சலித்துக்கொண்டால் ஆயுள் குறையும்!ஒரு வேலையைச் சலித்துக்கொண்டே செய்வதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 2.5 மடங்கு அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்ற வருடம் நடைபெற்ற ஆய்வில், ஒரு நிறுவனத்திலுள்ள நான்கில் ஒருவர் அதிகளவிலான வேலைப்பளுவினால், இது போன்ற சலிப்பிற்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனைப் போக்க அவர்கள் சாக்லேட் மற்றும் காஃபி போன்ற உற்சாகப் பொருட்களை நாடுவதாகவும் சென்ட்ரல் லங்காஷயர் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஏனென்றால் நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேறொன்றை நாடுவது சாதாரணமானது தான். ஆனால், அதிகளவு வேலைப்பளு மதுப் பொருட்களை உபயோகிக்கும் நிலைக்குக்கூட கொண்டு செல்லலாம்.

இந்த அதிகப்படியான வேலைப்பளு மற்றும் சலிப்பினால் 25 வயதுக்கு அதிகமான 7,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பெரும்பாலும் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து கூறுகின்றனர். மேலும் அவர்கள் இது போன்ற காரணங்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் 2.5 மடங்கு அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

பிடித்த வேலையைக் கிடைத்த நேரத்தில் சரியாக செய்தாலே போதும். எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று உங்களுக்கே தோன்றுகிறதா, நண்பர்களே? உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துகளையும் எங்களுடன் கீழே பகிர்ந்துகொள்ளுங்கள்.


English Version

Science shows you can die of boredom


It has been found that doing a work irritably increases the chance of stroke by 2.5 times. The research conducted last year has found that one in four people working in a company gets such depression due to excess work load. This research conducted by Central Lang Shire University says that they depend on addictive substances like chocolates and coffee to get rid of this tiredness and depression. Isn’t it quite normal to seek one thing in order to change us from another? But over work can lead to alcohol dependency.

A research conducted by the University College of London has found that the tiredness caused by excessive work load has caused death due to heart attack and stroke in about 7000 government employees who were above 25 years of age. They have also found that the chance of death due to such reasons increases by 2.5 times.

Everything will be fine if we do the work we like at the right time in the right way. Post your comments here.


geralt | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • PAVI THINGALUR - 09/08/2014, 5:08 AM

    more work less tension less tension more work

  • Rajesh Rajesh - 07/12/2014, 12:14 PM

    SUper