Natural Sciences Read in english

குழந்தைகளின் மலமும் தொத்திறைச்சியும்

By Niroshan Thillainathan on April 19th, 2014

குழந்தைகளின் மலமும் தொத்திறைச்சியும்முந்திய காலத்திலிருந்தே பலதரப்பட்ட உணவு பொருட்களையும், பானங்களையும் உற்பத்தி செய்ய நுண்ணுயிரிகள் (microorganisms) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நுரைமம் அல்லது ஆங்கிலத்தில் ஈஸ்ட் (yeast) என்றழைக்கப்படும் இந்த நுண்ணுயிரினம் தான் வழக்கமாக உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது. இதைக் கொண்டு ரொட்டி, பழரசம், மதுபானம் போன்ற பலவகையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் வியப்பூட்டும் விடயம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது என்னவென்றால், சுவையான மற்றும் ஆரோக்கியமான தொத்திறைச்சியை (sausage) உற்பத்தி செய்ய குழந்தைகளின் மலத்திலிருக்கும் ஒருவகையான நுண்ணுயிரினம் உதவுகின்றது என்பதேயாகும். இந்த நுண்ணுயிரானது இறைச்சியில் சில வகையான சத்துகளைக் கூட்டி, ஆரோக்கியமான உணவாக அதை உருமாற்றுகின்றது. எனவே, சிறுவாழூண் (probiotic) பானங்கள் போன்ற ஒரு சத்து நிறைந்த உணவு வகையாகத் தொத்திறைச்சியை உருவாக்கக் குழந்தைகளின் மலத்திலிருந்து கிடைக்கப் பெறும் நுண்ணியிரினம் வழிவகுக்கின்றது!

இது எப்படி நண்பர்களே? இதை வாசித்ததும் உங்களுக்குள் தற்போது என்ன தோன்றுகிறது? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Sausages made of baby poop


Right from ancient times, micro organisms have been used to prepare various food and drinks. Yeast is the commonly used micro organism in the food production. Varieties of food items like bread, wine and alcohol can be produced using yeast. Recently, researchers have found a surprising fact. It has been found that tasty and healthy sausage can be produced by using a micro organism from the babies’ feces. This micro organism increases the nutrient content of the sausage and makes it healthier. Thus, these micro organisms help to convert the sausage to something similar to probiotics drinks. What do you think now? Did you enjoy reading this Arivu Dose? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Steven Depolo | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

3 Comments

  • Dheena Mathan - 04/21/2014, 6:14 PM

    enaku knjm aacharyamagathan irukiradhu..

  • Gunasekaran Subash Chandra Bose - 04/20/2014, 5:25 AM

    பசுஞ்சானத்தை எரித்து விபூதியாக பூசி பசுஞ்சானத்தை மண் தரையில் மொழுகி அதில் படுத்து எழுந்த வீட்டு மிருகங்களின் கழிவுகளில் இயற்கை உரம் தயாரித்த தமிழனுக்கு இச்செய்தி வியப்பு ஊட்டுவதாக இருக்காது

  • Thanusan Sellathurai - 04/19/2014, 1:12 PM

    சிறுவர் மலம் என்டுவர்கள் பின்னர் வயதுசென்றவர்களின் மலம் எண்டாலும் அர்சரியப்படுவதட்கில்லை