Social Sciences

ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள்

By Niroshan Thillainathan on August 13th, 2014

ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள்ஒரு இடத்தைத் தோண்டும் போது ஒரு சில எலும்புக்கூடுகள் கிடைத்தாலே நாம் ஆச்சரியமாகப் பார்ப்போம். ஆனால், ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகளாக இருக்கிறது என்றால் அதை நம்ப முடியுமா? கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்திலுள்ள ஒரு உறைந்த ஏரி முழுவதும் எலும்புக்கூடுகளாக உள்ளது. இதனை 1942ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் காட்டுப் பாதுகாவலர் கண்டறிந்தார். அது வேறெங்கும் இல்லை இந்தியாவின், ரூப்குண்ட் எனும் இடத்தில் தான். உறைந்த ஏரி, கோடைக்காலத்தில் உருகத்தொடங்கிய போது தான், அதன் உண்மை உருவம் தெரிந்தது. ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள் கிடந்தன. தடய அறிவியல் (Forensic science) ஆய்வின் மூலம் அந்த எலும்புக்கூடுகள் கி.பி 850 ஆண்டுக்கும் முன்னர் வாழ்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. டி.என்.ஏ. சான்றுகளின்படி, அவர்கள் ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஊகிக்கப்பட்டது.

மேலும் அதே இடத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தடிகள், வளையங்கள் மற்றும் ஈட்டிகள் அவர்கள் அங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தலையில் அடிபட்டு இறந்துள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நேரடியாக மேலிருந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது, அதனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு கிரிக்கெட் பந்து அளவுள்ள பனிகட்டிகள் நிறைந்த பனிமழை பெய்திருக்க வேண்டும் எனவும், அப்போது தப்பிக்க முடியாத, ஒதுங்க முடியாத பல காரணங்களால் அவர்கள் இறந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர். இவையனைத்தும் அவர்கள் வாழ்ந்ததற்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டறியப்பட்டது என்பது தான் இதிலுள்ள அதிசயம். ஆசரியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Photo: Armin Kübelbeck, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

288 Comments

 • Siva Shankar M - 08/18/2014, 9:36 AM

  Very nice information

 • Gunaseelan Chandrasekaran - 08/18/2014, 9:32 AM

  Edla adisayam onum ila… just the snow delays the rate of decomposition and it might be covered with snow r else the place may be haunted

 • Sakthi Kumar - 08/18/2014, 9:26 AM

  Good informationtanksfriend

 • Naresh Kumar - 08/18/2014, 8:45 AM

  Thanks for good news

 • Suresh Nadarajah - 08/18/2014, 8:14 AM

  Namaku theriyatha meter kanaka eruku boss. Thanks

 • Raina Thiru - 08/18/2014, 8:03 AM

  Why

 • K Siva Kumar - 08/18/2014, 6:56 AM

  Very good information.

 • Kaveriyappan Arun - 08/18/2014, 6:38 AM

  எதற்க்காக ஆரய்ச்சியாளற்களுக்கு சிறமத்தை கொடுத்தார்கள் …நமது ஜோதிடர்களின் கையில் மண்டையோட்டை கொடுத்திறுந்தால் படித்து படித்து சொல்லிருப்பார்களே …கடவுள் தலையில் எழுதி இருக்கிறதாமே…இப்படியே பிறந்து ..இப்படியே வாழ்ந்து… இப்படியே சாக வேண்டும் என்று…

 • Sumathi Sri - 08/18/2014, 6:36 AM

  Thanks

 • Tamilselvam Ramanan - 08/18/2014, 6:27 AM

  Good news

 • Pathrinath Subramanian - 08/18/2014, 6:16 AM

  Nice one.

 • Prabhahar Dancer - 08/18/2014, 6:03 AM

  nice

 • Mohamed Rinoos - 08/18/2014, 5:31 AM

  Avangala yen padukolai seithiruka kudathu ore idathula thakkappattum irukirarkale

 • Rajesh Kumar - 08/18/2014, 5:10 AM

  omg

 • Abdul Hafeez - 08/18/2014, 4:49 AM

  colgate visible white…..

 • Sampath Rajan - 08/18/2014, 3:35 AM

  Unmaiyawe ajariyamana dhakaval dha fr

 • Ragu Raja - 08/18/2014, 3:20 AM

  Varalaru thodaratum

 • Govinda Raj - 08/18/2014, 3:17 AM

  super machi ….. . . .

 • Yuvan Yuvan - 08/18/2014, 3:14 AM

  Super news eh…..

 • Munas Munas - 08/18/2014, 1:34 AM

  Good information tanks friend

 • Usman Abdul - 08/17/2014, 7:58 PM

  Good news

 • Amsajath Sajath - 08/17/2014, 7:54 PM

  Onrum illay allahvin sakthium vallamayum thenpaduhirathu

 • Sathick Sms - 08/17/2014, 7:45 PM

  Satru yosika vendia visyam sago

 • Balaji Dhoni - 08/17/2014, 7:22 PM

  thambi idhalaam puyal kaathula ukkaandhu yaaraavadhu pori saaptu iruppaanga avungalta sollu

 • Jegann Murugan - 08/17/2014, 7:03 PM

  ஒரு வேளை அந்த இடம் இலங்கை தமிழர்கள் வாழ்ந்த இடமா இருக்குமோ??? அப்போது அங்கே ராஜபக்சே
  அதிபரா இருந்திருப்பானோ??