Social Sciences

ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள்

By Niroshan Thillainathan on August 13th, 2014

ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள்ஒரு இடத்தைத் தோண்டும் போது ஒரு சில எலும்புக்கூடுகள் கிடைத்தாலே நாம் ஆச்சரியமாகப் பார்ப்போம். ஆனால், ஒரு ஏரி முழுவதும் எலும்புக்கூடுகளாக இருக்கிறது என்றால் அதை நம்ப முடியுமா? கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்திலுள்ள ஒரு உறைந்த ஏரி முழுவதும் எலும்புக்கூடுகளாக உள்ளது. இதனை 1942ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் காட்டுப் பாதுகாவலர் கண்டறிந்தார். அது வேறெங்கும் இல்லை இந்தியாவின், ரூப்குண்ட் எனும் இடத்தில் தான். உறைந்த ஏரி, கோடைக்காலத்தில் உருகத்தொடங்கிய போது தான், அதன் உண்மை உருவம் தெரிந்தது. ஏரி முழுவதும் எலும்புக்கூடுகள் கிடந்தன. தடய அறிவியல் (Forensic science) ஆய்வின் மூலம் அந்த எலும்புக்கூடுகள் கி.பி 850 ஆண்டுக்கும் முன்னர் வாழ்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. டி.என்.ஏ. சான்றுகளின்படி, அவர்கள் ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஊகிக்கப்பட்டது.

மேலும் அதே இடத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தடிகள், வளையங்கள் மற்றும் ஈட்டிகள் அவர்கள் அங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தலையில் அடிபட்டு இறந்துள்ளனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நேரடியாக மேலிருந்து தாக்குதல் நடைபெற்றுள்ளது, அதனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு கிரிக்கெட் பந்து அளவுள்ள பனிகட்டிகள் நிறைந்த பனிமழை பெய்திருக்க வேண்டும் எனவும், அப்போது தப்பிக்க முடியாத, ஒதுங்க முடியாத பல காரணங்களால் அவர்கள் இறந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர். இவையனைத்தும் அவர்கள் வாழ்ந்ததற்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டறியப்பட்டது என்பது தான் இதிலுள்ள அதிசயம். ஆசரியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Photo: Armin Kübelbeck, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

288 Comments

  • Samsu Raj - 08/14/2014, 4:41 AM

    இவர்கள் எந்த இனத்து மக்கள்

  • Selvam Bhupathi - 08/14/2014, 4:20 AM

    Great news for me.

  • Muky Rocky - 08/14/2014, 3:19 AM

    Nice… but ungalukau eppadi indha visayam ellam theriudhu…

  • Jay Akshay - 08/14/2014, 3:18 AM

    Interesting…

  • Madhumitha Mital - 08/13/2014, 8:34 PM

    Mohamed Fazlan சொல்லியிருக்கும் விசயத்திற்கும்., இந்த மர்ம ஏரிக்கும் எதேனும் தொடர்பு இருக்குமா? தொல்லியல் துறை விளக்கம் தர வேண்டும்.

  • Vasanthi Vasa - 08/13/2014, 8:10 PM

    History epavumea oru marmam. . .than. Its nice

  • Srinivasan Pachiyappan - 08/13/2014, 7:36 PM

    இப்போது தான் மரங்கல் இல்லை அப்போது ஏதாவது ஒரு இடம் கூடஇல்லையா

  • Sridhar Mdu - 08/13/2014, 6:59 PM

    nice

  • Jagan Vembuli - 08/13/2014, 6:52 PM

    Gd info

  • Mohamed Fazlan - 08/13/2014, 5:34 PM

    எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம். அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை. (குர்ஆன் 11:82, 11:83)

    பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம். (குர்ஆன் 15:74)

    ____________________________________________

    நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (குர்ஆன் 105:1 – 105:5)

    • Shasa Farwin - 08/18/2014, 7:23 PM

      nice bro

    • Yasar Ahamed - 08/17/2014, 3:13 AM

      Crct ana edathula pota crctana cmt . . .

    • Asikparadise Retrun - 08/13/2014, 5:45 PM

      very nice …..brother