Social Sciences Read in english

எகிப்து பிரமிடுகளுக்கும் முந்தைய ஹெல்லினிக்கனின் பிரமிடுகள்

By Niroshan Thillainathan on November 21st, 2014

எகிப்து பிரமிடுகளுக்கும் முந்தைய ஹெல்லினிக்கனின் பிரமிடுகள்நண்பர்களே, இன்றைய அறிவு டோஸில் இன்று வரை மர்மமாக உள்ள ஓர் விடயத்தைப் பற்றிப் பார்ப்போம்!

ஐரோப்பாவில் பிரமிடுகளை எண்ணிப் பார்ப்பது சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் அங்கும் கொஞ்சம் பிரமிடுகள் உள்ளன. கிரீஸ் நாட்டில் மட்டும் 16 பிரமிடுகள் உள்ளன. இவற்றை பெரும்பாலும் ‘ஹெல்லினிக்கன் பிரமிடுகள்’ என்று அழைக்கின்றனர். இவற்றைப் பற்றிய குறிப்புகள் முதன் முதலில் பழங்கால கிரீக் புவியியலாளரான பவுசானியனியாஸ் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இந்த வகைக் கட்டிடங்கள் பிரமிடுகளைப் போலவே உள்ளன. ஒரு போரில் உயிரிழந்த வீரர்களுக்காக பொதுவாகக் கட்டப்பட்ட கல்லறைகளாக இவை இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் போருக்குப் பிறகு சமாதானம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இது கட்டப்பட்ட ஆண்டு கி.மு. 3000 மாக இருக்கலாம் எனக் கருதப்பட்டு, பின்பு 1990 ஆம் ஆண்டுகளில் கி.மு. 2720 என்று மாற்றப்பட்டது. இந்தக் காலக்கணிப்பு மட்டும் சரியாக இருந்தால் இவை எகிப்தின் பிரமிடுகளை விட பழமையானவையாக இருந்திருக்கும்.

இதில் மர்மம் என்னவென்றால் இதனை யார் கட்டியது, இதன் பயன்பாடு என்னவாக இருந்தது என்று கண்டறியவே முடியவில்லை. இவற்றை எல்லாம் அறிந்துகொள்ளும் முன்னரே அனைத்து அகழ்வாராய்ச்சிகளும் கைவிடப்பட்டுவிட்டன.

இவை மட்டும் கண்டறியப்பட்டிருந்தால் எகிப்து பிரமிடுகளுக்கும் முந்தைய வியப்பாக இதையும் சேர்க்க வாய்ப்பு இருந்திருக்கலாம். இது பற்றிய பல மர்மங்கள் இன்னும் தெரிய வராமலே உள்ளன.

ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இந்தப் பிரமிடுகளை யார் கட்டி இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உங்கள் பதிலையும் மற்றும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Pyramid of Hellenikon is older than Pyramids of Egypt


Hi friends! Let us learn about an unsolved mystery in this Arivu Dose. It might be a bit difficult to imagine pyramids in the Europe, but there are few. There are 16 pyramids in Greece. They are mostly known as ‘Hellenikon pyramids’. The first factual description about these pyramids was written by the Greek geologist Pousanias.

These buildings look like a pyramid. According to him, these might be a tomb for the soldiers who have lost their lives in the wars and there might have been some peace treaty after this war.

Initially it was believed to be built in 3000 BC. But it was changed to 2720 BC in 1990. If this calculation of their existence is true, then these pyramids are older than the Egyptian pyramids.

These buildings were built by whom and for what purpose is still unknown and mysterious. All archaeological expeditions were dropped before finding these facts. Had these facts been found, these buildings would have been added to the list of wonders before the Egyptian pyramids. There are so many unsolved mysteries associated with these buildings.

Isn’t it surprising? Who would have built such wonderful structures? Post your answers and your comments about this Arivu Dose.


Schuppi | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.