Future Sciences Read in english

உடல் உறுப்பு அச்சுப்பொறி

By Niroshan Thillainathan on March 23rd, 2014

உடல் உறுப்பு அச்சு பொறிஇன்று ஒருவரின் கல்லீரல் (liver) அல்லது சிறுநீரகம் (kidney) போன்ற ஏதாவது ஒரு உடல் உறுப்புப் பாதிக்கப் பட்டால், வேறு வழியே இல்லை, வேறு யாராவது ஒருவர் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து தான் உயிர் தப்ப முடியும். ஆனால் நவீன எதிர்காலத்தில் இதே போன்று ஒரு உடல் உறுப்பு தேவைப் படும் நிலையில், கணினியில் அச்சுப்பொறி (printer) ஊடாக ஏதாவது ஒரு புகைப்படத்தை அச்சு அடிப்பது போல், டாக்டர்கள் அந்தத் தேவைப் படும் உறுப்பை அதற்கென்றே அமைக்கப்பட்ட உடல் உறுப்பு அச்சுப்பொறியில் அச்சு அடித்து விடுவார்கள். இவ்வாறான அச்சுப்பொறி இன்னும் ஒரு 10 வருடங்களில் வந்துவிடும் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.

சரி, 10 வருடங்களில் உடல் உறுப்புகளை அச்சு அடித்து உயிர்களைக் காப்பாற்றலாம் என்பதை ஒரு பக்கத்தில் விடுவோம். ஆனால் இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், உடல் உறுப்புகளை அச்சு அடிக்கும் எதிர்கால உலகத்திற்கு, ஒரு முழு மனிதனை அச்சு அடிக்க எவ்வளவு நேரம் எடுக்கப் போகின்றது? ஒரு முழு உறுப்பை அச்சு அடிக்க வாய்ப்பு இருக்கும் போது, அடுத்ததாக ஒரு முழு மனிதனை அச்சு அடிக்க இயலாது என்று கூறமுடியாது! எனவே, இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான் அல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Print Your Own Organs


Organ transplantation is the only hope or way, which exists so far to treat patients with damaged organs, such as livers and kidneys. However, scientists believe that in the nearest future (in 10 years time) patients with damaged organs can be treated with the aid of a special organ printer, which can help the doctors to print the required organ. If such an organ printer is available, then printing a complete human would not be an impossible thing to be accomplished in future, and this is certainly a serious ethical point to be ponder upon by all parties.

Do you think such advancement is necessary in medical field? What are the pros and cons of having sophisticated technologies in the medical field for the sake of providing better life to humans? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Eva Wolf | Creative Commons by-sa 3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

3 Comments

  • Lucas - 10/30/2014, 10:08 AM

    Muzu manithanai oruvaka mudiyathu apdi nadanthalum uyir irukathu frds nan solrathu ungaluku purium ….

  • Archunaveera Arjun - 04/07/2014, 11:23 AM

    anuvai atibataiyaka kontal mattumea oru muzhu manithanai uruvaakka mutiyum

  • Rukmani Ruku - 03/24/2014, 6:41 AM

    kattayam sindikka vendum velaivugal neralam