Natural Sciences Read in english

இரத்தக் கண்ணீர்

By Niroshan Thillainathan on July 20th, 2014

இரத்தக் கண்ணீர்இரத்தக் கண்ணீர் என்ற சொல் அன்று முதல் இன்று வரை பிரபலமாக உள்ளது. ஆனால், இந்த வார்த்தைகளைக் கவனித்தால் “கண்ணீர் இரத்தமாக வருகிறதா?” என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? உண்மை சொல்லப்போனால், கண்ணீர் இரத்தமாக வருபவர்களும் இந்த உலகில் உள்ளன. இதற்கு ஹூமோலாக்ரியா என்று பெயர், இந்த உடல்நிலை கொண்டவர்களுக்குக் கண்ணீர் வரும்போது அதனுடன் சேர்ந்து இரத்தமும் வரும். இது அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஒரு சில பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், ஹூமோலாக்ரியா வேறு நோய்களுக்கு அறிகுறியாகக்கூட இருக்கலாம். உதாரணமாகக் கண்ணீர் உற்பத்தியாகும் இடத்தில் ஏற்படும் கட்டி அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை. இந்தியாவைச் சேர்ந்த டிவிங்கிள் த்விவேதி (Twinkle Dwivedi) என்ற பெண் இதைக் கொண்டு ஒரு ஆச்சரியத்தையே நிகழ்த்தியுள்ளார். இவரின் கண்கள் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் இருந்து தொடர்ச்சியாக இரத்தத்தினை வரவழைத்துள்ளார், அதுவும் எந்த வித காயங்களும் இல்லாமலே. இப்போது இவர் ஆராய்ச்சியிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இப்படிப் பட்ட ஓர் உடல் நிலையுடனும் உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே?


English Version

People who cry blood


A Blood tear is a popular term from the olden days. When we look at the literal meaning we may doubt if the tears are actually blood? In reality, there are people whose tears are blood. This is known as Haemolacria in which the tears are admixed with some blood. Although it is not common, it is seen in pregnant women with hormonal imbalance.

Haemolacria may be a symptom of an underlying disease like tumour in the lacrimal gland or bacterial infection. Twinkle Dwivedi of India has made a miracle to happen using this condition. She has made her eyes and other parts of the body bleed without any external injuries. She is now participating in various researches and television programmes.

Some people are living in this world with such mysterious conditions. Post your comments about it below.

 


binu kumar | Creative Commons by-sa-2.0, Flickr.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/22/2014, 2:14 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Sree Dharan Gánésh Jaï Kana Dasan Ammu Ajith Tamil Mrt Fakrudheen Aly Ahamad :)!

  • Kana Dasan - 07/22/2014, 12:19 PM

    Nice.

  • Fakrudheen Aly Ahamad - 07/22/2014, 11:54 AM

    Advancement

  • Ammu Ajith - 07/22/2014, 8:13 AM

    Sariya solla theriyala ana idhu oru anakku kedatcha pudhu news thax bro

  • Sree Dharan - 07/20/2014, 4:09 PM

    Avangalum namala mathri nrml manushanga thanga..ithla ethum vithyasama nenaika la illainga…

  • Tamil Mrt - 07/20/2014, 2:34 PM

    super news

  • Gánésh Jaï - 07/20/2014, 1:07 PM

    Nice information