Social Sciences Read in english

நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியம் சந்திரசேகர்

By Niroshan Thillainathan on May 23rd, 2014

நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியம் சந்திரசேகர்இன்றைய அறிவு டோஸில் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மற்றுமொரு நோபல் பரிசு வென்ற  சுப்பிரமணியம் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) எனும் விஞ்ஞானியைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்கின்றேன். இதில் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால், இவர் C.V.ராமனின் உறவினர் என்பது தான். 19.10.1910இல் லாகூரில் (பாக்கிஸ்தான்) உதயமான இவர், தனது ஆரம்பக் கல்வியைத் தன் தந்தை மற்றும் தனிப்பட்ட ஆசிரியரின் உதவியோடு பெற்றுக் கொண்டார். பின்னர் 1918ஆம் ஆண்டு சென்னையில் இடைநிலைக் கல்வியையும், இயற்பியல் துறையில் மேற்கல்வியையும் தொடர்ந்தார். கொம்தன் சிதறுகை மற்றும் புதிய புள்ளிவிபரம் (Compton Scattering and New Statistics) பற்றி இவர் எழுதிய முதல் ஆராய்ச்சிக் கட்டுரை 1928ஆம் ஆண்டு “Proceedings of the Royal Society” இல் பிரசுரிக்கப்பட்டது. இவரின் இந்த அபார ஆராய்ச்சியின் பலனாக Cambridge பல்கலைகழகத்தில் பயில இவருக்கு வாய்ப்புக் கிட்டியது. வெள்ளைக் குள்ள நட்சத்திரங்களின் கோட்பாடுத் தத்துவத்தை வழங்கிய இவர் தன்னுடய டாக்டர் பட்டத்தை 1933ஆம் ஆண்டு பெற்றார். இதனைத் தொடர்ந்து சிக்காகோ பல்கலைகழகத்தில் வானியல் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தார். பணியில் சேர்ந்த பின் பல உயர்தரப்பட்ட ஆராய்சிகளை மேற்கொண்ட இவர் 1958ஆம் ஆண்டு அமெரிக்காவின் குடியுரிமையைப் பெற்றார். 1983ஆம் ஆண்டு, தன்னுடய 73 ஆவது வயதில் நட்சத்திரங்கள் மற்றும் அவைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த இவரின் ஆராய்ச்சிப் பணிக்காக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை வென்றார். வயது முதிர்ந்தாலும் அறிவியல் துறையில் பல சாதனைகளை மேற்கொண்ட இவர், 50 கும் மேற்பட்ட டாக்டர் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளார். இவரின் சில மாணவர்களும் நோபல் பரிசை வென்றுள்ளனர் என்பது மிகவும் வியப்பான விடயம் ஆகும். பல தலைப்புகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட இவர், 21.08.1995 இல் தன்னுடைய 84-வது வயதில் சிக்காகோ நகரில் இயற்கையை எய்தினார்.

தமிழர்கள் பல்வேறு துறைகளில் எவ்வளவோ பிரம்மாண்டமான விடயங்களை சாதித்துள்ளார்கள். இவரை இட்டு நாம் மிகவும் பெருமைப்படவேண்டும் நண்பர்களே! இந்தத் தமிழரைப் பற்றிய உங்கள் கருத்தைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Nobel prize winner Subrahmanyan Chandrasekhar


In this Arivu Dose, let me share some interesting information about another great Nobel laureate who has made the Tamil people proud – Dr Subrahmanyan Chandrasekhar. It is interesting to know that he is related to Sir C.V.Raman. He was born on 19.10.1910 in Lahore (Pakistan) and received primary education from his father and private tutors. Later in 1918, he got his intermediate education and higher studies in Physics in Chennai. His first research article on Compton Scattering and New Statistics was published in 1928 in the “Proceedings of Royal Society”. This great research earned him a place in the Cambridge University. He proposed the theory of white dwarf stars and received his Doctorate in 1933. He was working as an Astronomy Lecturer in the Chicago University. He conducted numerous great researches while working and got his American citizenship in 1958.  In 1983, at the age of 73, he received the Nobel Prize for his research works on the evolution of stars. In spite of his old age, he made many achievements in the field of science and created more than 50 Doctorates. It is surprising to know that some of his students are also Nobel Laureates.  He published more than 10 books on various topics. This great Physicist passed away at the age of 84, in 21.08.1995.

Tamil people have made great achievements in many fields.  We should be proud of him! Post your comment about this great person of our time.


University of Chicago (Copyright holder)  [http://chandra.harvard.edu/about/chandra.html]

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

 • PAVI THINGALUR - 09/08/2014, 5:22 AM

  இவரை இட்டு நாம் மிகவும் பெருமைப்படவேண்டும் நண்பர்களே!

 • Azar Deen - 05/24/2014, 7:42 AM

  nanbare tamilarin perumai patri miga arumayaaga koorineer migavum nantri! :-)

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 05/27/2014, 2:06 PM

   வாழ்த்துக்கு நன்றி Azar Deen

 • Madhumitha Mital - 05/23/2014, 11:37 PM

  மிக அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 05/27/2014, 2:06 PM

   நன்றி Madhumitha Mital :)

 • Karuppu Roja - 05/23/2014, 6:32 PM

  kathalikaa. anbukaata. uthavi seiya vayathu pola ulaikaum sathanai padaikaum vayathu oru thadai ellai eanpathai aanithanamaga uruthi paduthiyavar

  • Karuppu Roja - 05/27/2014, 3:05 PM

   Ungal ariue kalantha nargunathergu naan adimai mastar

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 05/27/2014, 2:06 PM

   :)

 • Billgates Mathu - 05/23/2014, 5:35 PM

  Naan thamilanaaka irukkavea perumai padukirean

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 05/27/2014, 2:07 PM

   ஆம் ஆம் Billgates Mathu :)