Behavioural Sciences Read in english

நம்மைக் குறை கூறுபவர்களைக் கவனிப்பது நமக்கு ஆபத்து!

By Niroshan Thillainathan on June 30th, 2014

நம்மைக் குறை கூறுபவர்களைக் கவனிப்பது நமக்கு ஆபத்து!“குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்” என்று குற்றம் கண்டுபிடிப்பவர்களைப் புகழ்ந்து பாடுபவர்கள் உண்டு. ஆனால் இப்படி குறை கூறுபவர்களின் வார்த்தைகளை அதிகம் கேட்கும்போது நமது குணங்கள் எதிர்மறையாக மாறும் என்றால் உங்களால் அதை நம்ப முடியுமா, நண்பர்களே?

உங்களைக் குறை கூறுபவர்களை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால், அது உங்களுக்கு நல்லது தான்! இத்தகைய முடிவுகளைத் தான் மூளையைப் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தற்போது கூறியுள்ளனர். அதாவது, தம்மிடம் உள்ள குற்றங்களைப் பற்றிய செய்திகளை மாறி மாறி கேட்கும் போது அவர்களின் மூளை தானாகவே எதிர்மறையான விஷயங்களைச் சிந்திக்க ஆரம்பித்து விடுமாம். அதனால், அந்தப் போக்கிலேயே மூளை செயல்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

30 நிமிடங்களுக்கு மேல் எதிர்மறையான விஷயங்களை நாம் சிந்திக்கும்போது, மூளையின் பின்புற மேட்டில் (hippocampus) உள்ள நியூரான்கள் செயல்படாமலே போய்விடும். அந்த அளவிற்கு இந்த எதிர்மறையான விஷயங்கள் சக்தி வாய்ந்தவை. மூளையின் பின்புற மேட்டில் உள்ள அந்த நியூரான்கள் தான் நமது பிரச்சனைகளைத் தீர்க்க நம்மை யோசிக்க வைக்கும். அதுவே செயல்படாமல் போய்விட்டால், நம்மால் பிரச்சனைகளைத் தீர்க்கவும் முடியாது, அதிலிருந்து வெளிவரவும் முடியாது.

எனவே, இதிலிருந்து வெளிவர மூன்று வழிகள் உள்ளன.

  1. குறை கூறுபவர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்.
  2. குறை கூறுபவர்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, நீங்கள் தப்பித்துவிடுங்கள்.
  3. என்ன நடந்தாலும் உங்கள் மனதை வேறொரு உலகிற்கு கொண்டு சென்று விடுங்கள், இது மனரீதியாக உங்களை எதிர்மறையான விஷயங்களில் இருந்து பாதுகாக்கும்.

இதே போல் உங்களிடம் வேறு ஏதாவது கருத்துக்கள் அல்லது வழிகள் இருந்தாலும் அதைக் கீழே எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.


English Version

Negative thoughts change your brain


Hi friends! Can you believe that, when we listen to people who always find fault with others, our character could become negative?

It is good if you ignore the people who find fault with you. This has been said by the scientists who conduct studies on the human brain. When someone listens to their negative aspects repeatedly, their brain starts to think in the negative way automatically. Researchers say that there are more chances that your brain may begin to function in the same way from then on.

When we think negatively for 30 minutes, the neurons in the hippocampus lose their function. These negative thoughts are so powerful. The neurons on the hippocampus are the ones that help us to think about solutions to our problems. When it is disabled, we will not be able to solve any problem or get out of it.

There are 3 ways to come out of it.

  1. Stay away from people who find fault with you.
  2. Give responsibilities to those who find fault and escape from them.
  3. Whatever happens, ignore it and take your mind to another world. This will help you to keep you mind away from negative thoughts.

If you have any other ways to do it, post it here and share it with us.


miguelb | Creative Commons by-2.0, via Flickr.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/04/2014, 10:17 AM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Karthi Kesan Madhumitha Mital Rajan J Rajan Gokul Krish Prakash Vivek Kanda Vel Arshad Muhammad

  • Prakash Vivek - 07/02/2014, 6:42 AM

    nice

  • Kanda Vel - 07/02/2014, 5:26 AM

    Nice advice

  • Arshad Muhammad - 07/02/2014, 3:35 AM

    Exellent news

  • Karthi Kesan - 07/01/2014, 8:47 PM

    wow

  • Madhumitha Mital - 07/01/2014, 12:54 AM

    true. great explanation.

  • Rajan J Rajan - 06/30/2014, 7:51 PM

    I feel it. thanks boss.

  • Gokul Krish - 06/30/2014, 6:15 PM

    Useful news sir