Science & Mystery Read in english

கடலுக்கடியில் உள்ள மர்மமான மணல் வட்டங்கள்

By Niroshan Thillainathan on December 3rd, 2014

Mystery of the underwater sand circles1995-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்றபோது, கடலின் தரைப்பகுதியில் வட்டவடிவத்தில் மணல் திட்டுகளைப் பார்த்தனர். இது நிலப்பகுதியில் ஏற்கனவே காணப்படும் வடிவங்களைப் (crop circles) போலவே இருந்ததால், இவற்றின் மீதான ஆய்வு விரைவாகத் தொடங்கப்பட்டது. இது அறியப்பட்ட 10 ஆண்டுகளில் அடிக்கடி இதுபோல் தோன்றுவதும், மறைவதும் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் என்ன என்பது மட்டும் யாராலும் விளக்க முடியாத மர்மமாகவே இருந்தது.

அந்த மர்மத்திற்கான தீர்வு தற்போது கிடைத்துள்ளது.

இதுவும் ஒருவகையான மீன் தான்! கடலுக்கடியில் வாழும் இந்த மீன் தனது இணையினை கவருவதற்காக, இது போன்ற வட்ட வடிவிலான அமைப்பினை ஏற்படுத்துமாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த வகை மீன் வெறும் 5 அங்குலம் மட்டுமே நீளமுடையது. ஆனால் தனது பின்பகுதியினைத் தொடர்ந்து அசைப்பதன் மூலம் ஏறக்குறைய 7 அடி விட்டம் கொண்ட வட்டவடிவிலான அமைப்பினை உருவாக்குகிறது. இதன் அருகில் வரும் பெண் மீன் இதனால் கவரப்பட்டால் அந்த மீனுடன் இணைந்து அந்த வடிவத்தின் மேல் முட்டைகளை இடும்.

பின்னர் ஆண் மீன் குஞ்சுகள் வெளிவரும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும். பின்னர் அந்த வடிவத்தினை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடும். வெறும் 7 முதல் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் இந்த வடிவங்கள், ஒரு சில நாட்களில் நீரின் வேகத்தினால் விரைவாக அழிந்துவிடும்.

நேற்று மர்மமாக இருந்த ஓர் விஷயத்திற்கு இன்று விடை தெரிந்துவிட்டது. இதே போன்று தான், நமக்கு இன்று மர்மமாகத் தோன்றும் ஓர் விஷயத்திற்கு நாளை கண்டிப்பாக விடை தெரிந்துவிடும். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பிடித்ததா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தை கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Mystery of the underwater sand circles


In 1995, When the Japanese swimmers went underwater in a sea, they found deposits of sand in the form of circles. As they were similar to the crop circles found on land, studies on these mysterious circles were begun immediately. Although they have been found to appear and disappear quite a few times within the 10 years of their discovery, no one knows the reason behind them. This mystery has been solved now.

The reason is a fish! A type of marine fish creates such circular structures to attract its mate. It is surprising that this fish is just 5 inches long, but it makes a circle with a circumference of 7 feet by constantly moving its tail fin. The female fish gets attracted by these circles, mate with the fish and lays its eggs on these circles. The male fish protects the eggs till they hatch and then leaves the circular structures which get destroyed by the undercurrents after a few days.

Finally, a mystery has been solved today. Someday, we will find the answers to so many unsolved mysteries. What do you think? Did you like this Arivu Dose? Post your comments below.


Yoji Ookata, NHK

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • rajasekar - 12/05/2014, 10:18 AM

    arumai nanba!