Earth & Environment Read in english

மர்மமான பிங்க் நிற ஏரி

By Niroshan Thillainathan on October 30th, 2014

பிங்க் ஏரிநண்பர்களே, இந்த அதிசயத்தைக் கேளுங்கள்! மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள லேக் ஹில்லியர் என்ற ஏரியின் நிறம் என்ன தெரியுமா? அந்த ஏரி முழுவதும் பிங்க் நிறத்தில் உள்ளது! இது செயற்கையாக செய்யப்பட்டது அல்ல, இயற்கையாகவே பிங்க் நிறத்தில் தான் உள்ளது. இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் உள்ளது. ஏனென்றால் நம் ஊர்களில் எல்லாம் இப்படி நிறத்தில் ஒரு ஏரி கூட இருப்பதைப் பார்த்திருக்கமாட்டோம். ஆனால் இந்த ஏரி எந்தக் காலநிலையிலும் தனது பிங்க் நிறத்தில் இருந்து மாறுவதில்லை. அவ்வளவு ஏன், இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினால் கூட தனது நிறத்தினை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாய் இருக்கிறது.

இந்தப் பிங்க் நிறத்தினால் இந்த நாட்டிற்கு மேல் பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கூட இந்த ஏரியினைப் பார்க்க இயலும். இதன் நிறத்திற்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படாவிட்டாலும், இது போல் வேறு நிறங்களில் இருக்கும் ஒரு சில நீர்நிலைகள் அதிலிருக்கும் பாக்டீரியாக்களினால் அந்த நிறத்தினை பெற்றிருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீருக்கு நிறமே கிடையாது என்று அறிந்திருப்போம், ஆனால் ஒரு ஏரி முழுவதும் பிங்க் நிறத்தில் இருப்பது ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Mysterious pink lake in Western Australia


Dear friends, do you know the color of Lake Hillier in West Australia? The whole lake is in a beautiful pink color. This color is not artificially made. It is the natural color of the lake. It is really surprising, because we would have never seen such a lake in our places. But the lake doesn’t changes from its pink color in any season. Even if its water is drained, it stays in its glorious pink, without changing color. This pink color has made it possible to view the lake from an airplane flying over this country. Though there is lack of proper explanation for its color, it has been found that some of the similar lakes with other colors have acquired these colors due to the bacteria present in them.

We know that water is colorless. Isn’t it surprising to find a lake which is completely pink in color? Don’t forget to post your comments about this amazing Arivu Dose.


Hiltonj | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.