Behavioural Sciences Read in english

இசையால் மழையைக் கூட வரவழைக்க முடியும்

By Niroshan Thillainathan on July 2nd, 2014

இசையால் மழையைக் கூட வரவழைக்க முடியும்“இசையால் மழையைக் கூட வரவழைக்க முடியும்!” எனப் பல புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால் தற்போதைய கடைகள் இந்த இசையினைத் தங்கள் வியாபாரத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா…?

இசை, உளவியல் ரீதியாகப் பல விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பின்னணி இசையின் துணை கொண்டு எந்த ஒரு வாடிக்கையாளரையும் கட்டுபடுத்த முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சில உணவகங்கள் மற்றும் கடைகளில் இந்தப் பின்னணி இசையினைக் கொண்டு பல வேளைகளில் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகின்றனர்.

சில்லரை விற்பனைக் கடைகள் பிரபலமான பாடல்களை எந்த வித கூச்சமும் இல்லாமல் சாதாரணமாக இசைக்கவிடுகின்றனர். இப்படிப்பட்ட இசையினை நாம் கேட்பதன் மூலம் நமது கவனம் சிதறும் மற்றும் நமது நிலையான பொருட்கள் வாங்கும் இலக்கில் மாற்றம் ஏற்பட்டாலும் நமக்கு அது பெரிதாகத் தோன்றாது. ஆனால் இந்த உளவியல் காரணங்கள் நன்கு பழக்கப்பட்ட வெற்றியடைந்த பாடல்களுக்கு பொருந்தாது. காரணம், அவை ஏற்கனவே நம் மனதில் நிலைத்து நின்று பெயர் பெற்றுவிட்டன. பெரும்பாலான கடைகளில் பாரம்பரிய இசையினை (classical music) வாடிக்கையாளர்களைக் கேட்க வைக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் அதிகப் பொருட்களையும் விலையுயர்ந்தப் பொருட்களையும் வாங்குகிறார்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தான் பல்பொருள் அங்காடிகளில் (supermarket) மெதுவான இசையையும், உணவகங்களில் வேகமான இசையையும் கேட்க வைக்கிறார்கள். பல்பொருள் அங்காடிகளில் 38% அதிகமான விற்பனை இந்த இசையால் நடக்கிறது என்பது ஆய்விலிருந்து கிடைத்த ஆச்சரியப்படுத்தும் உண்மை ஆகும்.

என்ன நண்பர்களே, நமக்குத் தெரிந்த இசையே நம்மை இவ்வளவு தூரம் கட்டுப்படுத்துகிறதா எனத் தோன்றுகிறதா….? உங்கள் எண்ணங்களைக் கீழே எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.


English Version

Music used as psychology trick in supermarkets


We would have read in books that music can make it rain. But could you believe that, in recent times music is being used by various shops to promote their business?

Music has the ability to produce many psychological effects. Various research reports say that the customers can be controlled by background music. Some of the restaurants and shops use this background music to create a favourable atmosphere for them.

Small shops play famous songs loudly without any hesitation. When we listen to these songs we get distracted and we don’t bother much even if our shopping gets a bit deviated from the plan. But the famous songs don’t suit this psychology because we are used to these songs. Most shops play classical songs. It has been proved that the customers buy expensive things when listening to these songs.

In this way they play melodies in supermarkets and fast beat songs in restaurants. The surprising result in a research is that there is an extra 38% sale in the shops due to this music.

Can you believe how much music controls us? Share your thoughts here.


Sanwuisusp | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

9 Comments

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/08/2014, 11:00 AM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Selva Kumar Arshath Harsha Santhosh Billa Suresh Vijayakumar Sachu Arul Sabari Singaravalli Seeman Poncavetrivel Poncavetrivel Danushan Kumar

 • Arshath Harsha - 07/04/2014, 2:20 PM

  Poi

 • Santhosh Billa - 07/04/2014, 1:39 PM

  Inimae uushaaraa irukanum….

 • Suresh Vijayakumar - 07/04/2014, 12:50 PM

  nice thanks for information

 • Sachu Arul Sabari - 07/04/2014, 5:12 AM

  Very nice

 • Singaravalli Seeman - 07/04/2014, 3:01 AM

  veri nice

 • Selva Kumar - 07/03/2014, 6:25 AM

  Super madam good

 • Poncavetrivel Poncavetrivel - 07/02/2014, 4:49 PM

  Isaiyal vasamaaga ulagam yethu

 • Danushan Kumar - 07/02/2014, 2:54 PM

  Enaku athigam sound alargy pa…