Natural Sciences Read in english

மரம் ஏறும் மட்ஸ்கீப்பர் மீன்கள்

By Niroshan Thillainathan on January 18th, 2015

Mudskippers Can Climb Treesமீன்களால் மரம் ஏற முடியுமா? சரி சரி, இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன், மீன்களால் மரம் ஏற முடியுமா? பலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக, மீனால் எப்படி மரம் ஏற முடியும் என்று தான் கேட்பார்கள். ஏனென்றால் பெரும்பாலான மீன்கள் தண்ணீரினை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே கூட இறந்துவிடுவன. பிறகு மரம் ஏறுவதற்கு எப்படி சாத்தியம் இருக்கப் போகிறது?

சரி, நானே பதிலைக் கூறிவிடுறேன். ஆம், ஒரு அரிய வகை மீனால் மரம் ஏற முடியும்! அந்த வகை மீனுக்குப் பெயர்தான் ‘மட்ஸ்கீப்பர்’. இவை வாழ்நாளின் பெரும்பகுதியினை நீரில்லாமலே கழிக்கும் திறன் படைத்தன. மாங்குரோவ் காடுகளில் வாழும் இவற்றின் மற்றொரு சிறப்பம்சம் மரம் ஏறும் திறன்தான். கால்கள் இல்லாமல் எப்படி மரம் ஏற முடியும் என நீங்கள் நினைப்பது சரிதான், ஆனால் அதற்கு பதிலாகத்தான் இவை மார்புத் துடுப்புகள் மற்றும் இடுப்புத் துடுப்புகளைப் பயன்படுத்துகின்றன. இதன் செவுள்களைச் சுற்றி சாக்கு போன்ற படலத்தினை ஏற்படுத்திக் கொள்கிறது, இது மூச்சு விடுவதற்கு நன்கு உதவுகிறது. பெரிய அலைகள் ஏற்படும் காலங்கள் அல்லது தண்ணீரில் சூழ்நிலை சரியில்லாத காலங்களில் இந்த மீன்கள் மரங்களில் ஏறிவிடுவன.

இது ஆச்சரியமாக இல்லையா? இந்த வகை மீனைப் பற்றி நீங்கள் முன்பே அறிந்துள்ளீர்களா நண்பர்களே? உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

 


English Version

Mudskippers Can Climb Trees


Can fishes climb tree? You might be surprised by this question. But, try to answer this question. In reply, you might ask how a fish can climb a tree. Most of the fishes die in few minutes when they come out of water. Then how is it possible to climb a tree?

Let me give you the answer. A rare variety of fish called the Mudskipper can climb trees. They have the ability to live without water for major part of their life. Climbing trees is the special feature of these fishes which live in the mangrove forests. You may think how it is possible to climb without limbs. These fishes use their fins to climb and a sac like membrane around their gills helps them to breathe out of water. When there are huge waves or when the water is not good, these fishes climb on the trees.

Isn’t it surprising? Did you know about these fishes already? Post your comments about this Arivu Dose below.


Bjørn Christian Tørrissen | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.