Astronomy Read in english

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செய்தி

By Niroshan Thillainathan on April 1st, 2014

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செய்திநீங்கள் எல்லோருமே வெளிநாடு ஒன்றிற்கு உல்லாசப் பயணம் சென்றால் அந்நாட்டில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு ஓர் அஞ்சலட்டை (postcard) அனுப்பி இருப்பீர்கள், சரி தானே? இதே போன்று தான் 1977ம் ஆண்டிலும் விண்வெளி ஆய்வு அமைப்பாகிய நாசா (NASA) ஓர் விசேஷமான அஞ்சலட்டை அனுப்பி இருந்தது. அதுவும் புவியில் வாழும் ஒருவருக்கு அல்ல, விண்வெளியில் வாழக்கூடிய வேற்றுலக உயிரிகளுக்கு (alien) அனுப்பப் பட்டது. 1977ஆம் ஆண்டில் ஏவப்பட்ட வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 (Voyager 1, 2) எனப்படும் விண்கலங்கள், விண்வெளியில் வாழக்கூடிய உயிரிகளுக்கு, புவியின் பல்லினங்கள் மற்றும் பண்பாடுகளை ஒரு தகவலாக கொண்டு செல்கின்றன. இத்தகவல் தங்கம் மற்றும் செப்பினால் செய்யப்பட்ட ஓர் 30cm பெரிதான சீ.டீ. ஒன்றில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் அறிவியல் அறிஞரான டாக்டர் கார்ல் சாகனும் (Carl Sagan) அவரது குழுவும் மொத்தமாக 115 படங்கள், இயற்கையில் காணப்படும் ஒலிகள், வெவ்வேறு பண்பாடுகளின் இசைகள் மற்றும் 55 மொழிகளில் வணக்கங்களையும் இணைத்துள்ளனர். இன்று நமது சூரியனிலிருந்து வொயேஜர் 1 18,900,000,000 km மற்றும் வொயேஜர் 2 15,300,000,000 km தூரத்திற்குச் சென்றுவிட்டது. சரி, பொறுத்திருந்து பார்ப்போமே! எதிர்காலத்தில் தற்செயலாக ஏதாவது ஒரு விண்வெளி உயிரி இந்த சீ.டீ. ஒன்றை கண்டெடுத்து நமது புவியை நோக்கி வருவார்களோ தெரியாது.

அது சரி, டாக்டர் கார்ல் சாகன் உங்களிடம் வந்து விண்வெளியில் வாழும் அந்த உயிரினங்களுக்கு வணக்கத்திற்குப் பதிலாக ஓர் செய்தி கூறச் சொன்னால் என்ன செய்தி அனுப்பி விடுவீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதி விட்டுச் செல்லுங்கள்!


English Version

Message to the Universe in 55 different Languages


Most of us would have sent a post card to our relatives, when we tour abroad. In 1977, the space research organization NASA sent a special post card. Do you know, to whom? Not to anyone on the Earth. They sent it to the aliens in the outer space. The satellites Voyager 1 and Voyager 2 which were launched in 1977 carried the message about the life forms and culture on the Earth. This message was stored in a CD of size 30 cm made of gold and copper.

Dr. Carl Sagan, the leading scientist in this mission and his team has stored 115 pictures, natural sounds, music of various cultures and a welcome message in 55 different languages in that CD. Now, Voyager 1 is at a distance of 18,900,000,000 km and Voyager 2 is at 15,300,000,000 km from the Sun. Let us hope that, in the near future, some alien tumble upon this CD and gets in touch with us.

If Dr. Carl Sagan would have asked you to send a message to the aliens, what would be your message to them? Post your comments below.


NASA/JPL | Public domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

  • mayilsamy - 04/03/2015, 12:49 PM

    வரும்போது கார செவ் வாங்கிட்டு வர சொல்லி இருப்பேன்

  • shiva - 12/31/2014, 9:00 AM

    nam natpu valarthukolwom thozhilnuppathai pakirnthu kolwom

  • Prakash kumar - 09/24/2014, 1:09 PM

    Naan antha seythiyaum anuppamatten.ennum srithu varutankal than nane anta sarasrathai thusu thatti vituven.anakku therium ethu mutive ellathathunu.anathu kanavil varum erul thaan ethai anakku vilakiyathu.athu appaar patta oru payam.muthalil pumiyai oru kai pathu tu tathan atutha velaea!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,annutaia aim ku murru pullia ellai

  • Dharshan Raichand - 04/02/2014, 6:32 AM

    Let’s try and see our nuclear weapon :p

  • Sivashankari Ramamoorthi - 04/01/2014, 5:43 PM

    wow~

  • Ra Ni Thasan - 04/01/2014, 12:00 PM

    Please come and distroy all kind of weapons…..

  • Kandiah Moorthy - 04/01/2014, 11:24 AM

    hope to see you soon