Future Sciences Read in english

மனிதனுக்கு எதிர்காலத்தில் இறப்பு நிச்சயமா

By Niroshan Thillainathan on February 12th, 2014

மனிதனுக்கு எதிர்காலத்தில் இறப்பு நிச்சயமாஇறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…?

இல்லவே இல்லை என்று விஞ்ஞானம் கூறுகின்றது!

Google நிறுவனத்தில் Director of Engineering ஆக பணிபுரியும் Ray Kurzweil என்பவர் ஒரு நம்ப முடியாத விடயத்தைக் கூறியிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால், இவர் கடந்த காலங்களில் கூறிய அதிகமான விடயங்கள் உண்மையாகவே நடந்து விட்டன! ஆகவே, இதுவும் சும்மாஅறிவியல் புனைவு (Scince Fiction) என்று சொல்லிவிட்டுப் போக முடியாது! சரி, அவர் அப்படி என்ன தான் கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்…

இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நாம் நமது மூளையில் பதிந்திருக்கும் அனைத்தையும் ஒரு கணினியில் பதிவேற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்! அதன் விளைவு என்ன என்பது உங்களுக்கும் புரிகிறதா…? அப்படி ஒரு நிலைமை வந்தால், நமது உடல் இறந்துவிட்டாலும், நாம் ஓர் கணினியுள் நமது வாழ்க்கையைத் தொடரலாம். எனவே, மனிதனுக்கு இறப்பே  இல்லை! தனது கனவுகள், நினைவுகள் எல்லாவற்றுடனும் எதிர்காலத்தில் வாழும் மனிதன் இறந்தபின், ஒரு செயற்கை வாழ்க்கையை கணினிக்குள் தொடரலாம். ஏன், அதை ஒரு விதமான டிஜிட்டல் வாழ்க்கை என்று கூட அழைக்கலாம். அது மட்டும் இல்லை நண்பர்களே, இது தான் ஓர் சில காலங்களுக்கு முன்பு வெளிவந்திருக்கும் டிரான்சன்டன்ஸ் (Transcendence) என்னும் ஹாலிவூட் திரைப்படத்தின் கதையும் ஆகும்.

மனித மூளை போல் ஓர் அதிசயம் இந்த பிரபஞ்சத்திலே இல்லை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை! ஒரு செயற்கை மனித மூளையை உருவாக்குவதற்கு தற்போது இருக்கும் கணினிகள் போதாது. ஆனால், Moore’s law எனப்படும் சட்டத்தின் அடிப்படையில் கணினிகளின் கணக்கீட்டு ஆற்றல் ஏறத்தாழ ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தான் Ray Kurzweil 30 வருடங்களில் இருக்கும் கணினிகளுடன் ஒரு செயற்கை மனித மூளையைக் கட்டாயம் உருவாக்க முடியும் என்று கூறுகிறார்.

இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைத் தவறாமல் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Live Forever by Transferring Your Brain into a Computer


Everyone is scared to hear about death. The life expectancy of a man in Germany is 77 years. So we all travel towards the ultimate destination – death. But science defers! The Director of Engineering at Google, Ray Kurzweil, says an unbelievable fact. It is really fascinating to know that most of his hypothesis has happened in reality.

He says, that in the next 30 years we will be able to save the information from our brain to a computer. If this happens, we will be able to continue our life in a computer and there will be no death. A person can live artificially in a computer along with his dreams and memories which were stored in his brain while he was alive. It can be called as Digital Life. The Hollywood movie ‘Transcendence is based on this theory.

Human brain is a wonder in the universe. The present computers are not sufficient to create an artificial brain. But according to Moore’s law, the computing power of a computer doubles in every two years. Based on this, Ray Kurzweil says that we can create artificial brains using the computers in next 30 years.

What do you think of such a future, where we will be transferred into a computer? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Muehlenau | Creative Commons Attribution 3.0 Unported license, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

260 Comments

 • Mahendraselvan D. - 09/28/2014, 8:42 PM

  இதற்கு வாய்ப்புண்டு.

 • johnbrittojoseph - 09/28/2014, 7:09 PM

  suyamaka senthikak kudiya mind wisdom, brain kandupudikamudiyathu

 • parthipan - 09/22/2014, 3:53 PM

  உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை [தலை சுற்றுகிறது] ரொம்ப நன்றி…

 • saravanan.v - 08/22/2014, 7:03 AM

  good

 • samsul - 08/21/2014, 7:54 PM

  ulagam alinthupohum appothu enna seyya mudim!?????? Ellarukum, ellathukum oooooooooooooooooooooooo thaan…

 • syed arabi - 08/21/2014, 10:24 AM

  No way and no road.

 • Nawfar - 08/20/2014, 8:21 PM

  ok No need to make human please make one only one fly enough caaaaaaaaaaant

  try and proof together all world people’s and all material make one fly !

  cant only dream until end of this world.

  the god only can creator of ALLAH only

 • Rajarajan - 08/20/2014, 7:57 PM

  Really superb. Pls continue this

 • Saravanan Dhamu - 07/29/2014, 3:44 PM

  Nice

 • Mani Kandan - 07/27/2014, 6:43 PM

  hi hw r u time ku sapataraya ma i wii
  always think about u nee nalla iruka nu
  solu pothu ma t.m

 • Kamaladasan Kamal - 07/26/2014, 4:45 PM

  எந்திரன் என்ற கற்பனை வடிவம் நிச்சயமாகின்றது

 • Sakthi Swt - 07/26/2014, 10:18 AM

  Mm nice

 • Natarajan Raja - 07/26/2014, 10:09 AM

  Namburaa mathri sollu

 • Kavi Amutha - 07/26/2014, 8:26 AM

  Everything is possible our life

 • Sankar Vishwakarma - 07/26/2014, 7:23 AM

  Oh kkkk nice but it s impossible….

 • Sabari Lakshmanan - 07/26/2014, 4:38 AM

  Is tis possible?

 • Kurumbu Karumam Raja - 07/26/2014, 12:09 AM

  AllAHVAI thavira vera yaaralum seiya mudiyadha vishayam

 • Kannan Siva - 07/25/2014, 1:46 PM

  Nambithaney aaganum

 • Ra Ja - 07/25/2014, 12:27 PM

  Hai fnd poithana

 • Mohamed Imran - 07/25/2014, 12:15 PM

  Impossible.unbelievable

 • Ponmanmchemmal Ranjith - 07/25/2014, 8:12 AM

  APADEYA

 • Angs Aps - 07/25/2014, 6:49 AM

  unbelievable

 • Kalidas Das - 07/25/2014, 6:04 AM

  Super mind

 • Samudra Sudha - 07/25/2014, 6:04 AM

  Great science

 • Zayaf Fayaz - 07/25/2014, 6:01 AM

  It’s all they trying only for temporary not for permanent.