Social Sciences Read in english

மனிதன் உருவாக்கிய தீவு

By Niroshan Thillainathan on January 8th, 2015

Japan really went all out when they built their airportஜப்பான் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி உலகம் அறிந்ததே. இந்த முன்னேற்றம் அவர்களின் அபாரமான அறிவைச் சார்ந்தது. அத்தகைய அறிவுடையவர்கள் தனியாக ஓர் தீவையே உருவாக்க முயற்சி செய்ததை நீங்கள் அறிவீர்களா?

ஜப்பானில் ‘ஒசாகா’ விமான நிலையம் மிகவும் கூட்ட நெரிசலுடன், அதிகமான விமானங்கள் தரையிறங்குவதும் மேல் செல்வதுமாகக் காணப்பட்டது. இதைக் குறைக்க அந்த அரசு ஓர் புது விமான நிலையம் கட்ட முயற்சி செய்தது. அவர்கள் நாட்டில் அதற்குப் போதிய இடம் இல்லாததால் தனியே கடலின் நடுவில் ஒரு தீவை உருவாக்கி அங்கு விமான நிலையம் கட்ட முடிவெடுத்தனர்.

1980 களின் பிற்பாதியில் கட்ட ஆரம்பித்து 1994 ல் கன்சாய் விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் ஒசாகா வளைகுடாவின் நடுவில், ஒசாகா நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒசாகா விமான நிலையம் இப்போது கூட்ட நெரிசல் இல்லாமல் உள்ளூர் விமானங்களுக்கு மட்டும் சேவை செய்து வருகிறது.

இந்த அற்புதத் தீவை கட்டும்போது நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 10,000 வேலையாட்கள் சுமார் 3 ஆண்டுகள் உழைத்தனர். இந்தத் தீவையும், ஜப்பான் நாட்டையும் இணைக்க 1990 ல் மிகப்பெரிய பாலம் ஒன்றும் கட்டப்பட்டது.

நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இந்த சம்பவம் பற்றித் தெரியும்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Japan really went all out when they built their airport


The whole world is aware of the enormous development of Japan. This development is the evidence of their excellent intelligence. Do you know that these intelligent people tried to create an artificial island?

The ‘Osaka’ airport was so crowded always with airplanes departing and landing all day. To reduce the inconvenience, the Japan Government decided to build a new airport. As there was not enough land to build the airport in their country, they planned to create an island in the middle of the sea and construct an airport in it.

In the latter half of 1980, the construction of the airport was begun and was named Kansai Airport. This airport is in the middle of Osaka peninsula and in the south west of Osaka city. Now Osaka Airport is not so crowded and provides only domestic air service. It was constructed in such a way that the airport will not be affected by natural disasters like earth quakes and hurricanes. Around 10000 workers worked for about 3 years tirelessly to complete this Airport. In 1990, a huge bridge was constructed to connect the Airport with the mainland of Japan.

How many of you know this interesting fact already? Post your comments below.


NASA Earth Observatory | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.