Natural Sciences Read in english

சதுர தர்பூசணி

By Niroshan Thillainathan on October 2nd, 2014

சதுர தர்பூசணிஉங்களில் பலர் நிச்சயமாகப் பந்து போன்ற வடிவம் கொண்ட தர்பூசணியைச் (watermelon) சாப்பிட்டிருப்பீர்கள், சரி தானே? ஆனால் இதே தர்பூசணியை சதுர வடிவில் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஜப்பான் தான், நண்பர்களே! அது எப்படி அங்கு மட்டும் சதுர வடிவில் தர்பூசணி உள்ளது என்று சிந்திக்கின்றீர்களா? அதற்குக் காரணம் அவர்கள் தர்பூசணியினை சதுர வடிவ கண்ணாடியினுள் வளர்க்கின்றனர். இப்படி சதுர வடிவில் இருந்தால் தான் அவற்றை எளிதாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முடியுமாம்.

சதுர வடிவிலான இந்த வகைத் தர்பூசணிப் பழங்களுக்கு விலையும் அதிகம் தான். சாதாரண தர்பூசணி 15-20$ என்றால் இந்த சதுர தர்பூசணி 82$ அளவிற்கு விற்பனையாகிறது. குளிர்பதனப் பெட்டியினுள் வைப்பதற்காக, பிரத்யேகமாகவே இதுபோன்ற தர்பூசணி வளர்க்கப்படுகிறது. ஆனால் இவை அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமடையவில்லை.

நமக்குத் தகுந்தவாறு இயற்கையினை வளைத்துக்கொள்ளும் வழக்கம் வளர்ந்துகொண்டே செல்வதற்கு இதுவே ஒரு சான்று. இது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அதைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Japan has Square Watermelons


You all would have tasted the sweet watermelon, which looks like a rugby ball. Do you want to have a cube shaped watermelon? If you say yes, you have to take a trip to Japan! How do they grow these cube shaped watermelons? They grow the watermelons in a cube shaped glass container, which makes it easy to store these watermelons in the refrigerator. The cost of these watermelons is quite expensive. While the normal watermelons cost 15 – 20$, these special watermelons cost around 82$. But these watermelons have not become popular in the USA yet. This is a good example for how man has been progressing in changing the nature according to his need. Do you think that such an attitude is a healthy one? Post your comments below.


Flickr user laughlin | Creative Commons by- 2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.