Natural Sciences Read in english

எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்

By Niroshan Thillainathan on February 17th, 2014

எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள்நம்மைச் சுற்றி எவ்வளவோ நடைபெறுகின்றது. சில விடயங்கள் நமது கண்களுக்குத் தெரிந்தும் நமது வாழ்க்கைக்கு உபயோகமானவை இல்லை, ஆனால் வேறு சில விடயங்கள் நமது கண்களுக்குத் தெரியாமலே நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பிரியோசனமாக இருக்கின்றன. அப்படி ஒன்றானது தான் electronmagnetic waves என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மின்காந்த அலைகள். இந்த மின்காந்த அலைகள் நம்மைச் சுற்றி எப்போதுமே இருக்கின்றன. உண்மை சொல்லப் போனால், இந்த அலைகள் இல்லாமல் நமது இன்றைய நவீன உலகமும், வாழ்க்கையும் இருக்க முடியாது. வானொலிப்பெட்டி, மொபைல் போன், WiFi, புவியிடங்காட்டி (GPS Navigation) போன்ற பலவற்றை இந்த மின்காந்த அலைகள் இல்லாமல் செயல்படாது. எனவே, இந்த அறிவு டோஸில் இந்த அலைகள் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மின்காந்த அலைகளின் wavelength என்று கூறப்படும் அலைநீளம் பொறுத்து, இவை வெவ்வேறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அந்த வகைகளில் ஒன்று தான் ஒளி (light). ஒளியைத் தவிர்த்து மேலும் வானொலி அலைகள் (radio waves), நுண்ணலைகள் (micro waves), அகச்சிவப்புக் கதிர்கள் (infrared waves), புற ஊதா கதிர்கள் (ultraviolet waves), ஊடு கதிர் அலைகள் (x-ray) மேலும் காம்மா அலைகள் (gamma waves) என்ற  வகைகள் காணப் படுகின்றன. நமது நவீன உலகில் இந்த அனைத்து வகையான மின்காந்த அலைகளும் ஒவ்வொரு விதமாக உபயோகிக்கப்படுகின்றன. சில உதாரணங்கள் தருகின்றேன்…

வானொலி அலைகள் இருப்பதால் தான் வானொலிப் பெட்டியில் தினமும் பாடல்கள் கேட்க முடிகின்றது. நுண்ணலைகள் உதவியுடன் மொபைல் போன் ஊடாக தூரத்தில் இருக்கும் நண்பனுடன் பேச முடிகின்றது. அகச்சிவப்புக் கதிர்கள் இருப்பதால் தொலைக் கட்டுப்படுத்தியின் (remote control) உதவியுடன் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை மாற்ற முடிகின்றது. புற ஊதா கதிர்கள் மருத்துவத்தில் சில பாக்டீரியாக்களை கொல்ல உபயோகிக்கப் படுகின்றது. ஊடு கதிர் அலைகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். டாக்டரிடம் சென்று X-Ray படம் எடுப்பதற்கு ஊடு கதிர் அலைகள் தேவைப்படுகின்றன. மற்றும் காம்மா அலைகளும் மருத்துவத்தில் சில விதமான புற்றுநோயை குணப்படுத்த உதவுகின்றது.

மின்காந்த அலைகளில் உள்ள விசேஷம் என்ன தெரியுமா? இந்த அலைகள் ஒரு பொருளில் படும் போது, அதனது அலைநீளம் பொறுத்து ஏற்படும் விளைவு மூன்று விதமாக இருக்கக் கூடும். ஒன்று அந்த அலை அந்த பொருளில் பட்டுத் தெறிக்கின்றது, இல்லை என்றால் அந்தப் பொருளை ஊடுறுவிச் செல்கின்றது அல்லது அவ்வலை உறிஞ்சி எடுக்கப் படுகின்றது. இந்தக் காரணத்தால் தான் உதாரணத்திற்கு ஒளி ஒரு வீட்டுச் சுவரில் பட்டுத் தெறிக்கின்றது, ஆனால் வானொலி அலைகள் அந்தச் சுவரை ஊடுறுவிச் செல்கின்றது. அப்படி ஊடுருவிச் செல்வதால் தான் வீட்டுக் கதவும், ஜன்னல்களும் மூடி இருந்தும், நம்மால் வானொலிப் பெட்டியில் பாடல்கள் கேட்க முடிகின்றது. இதே காரணத்தால் தான் நாம் வீட்டில் ஓர் அறைக்குள் இருந்தும் மொபைல் போனில் பேச முடிகின்றது.

சரி, கடைசியில் மின்காந்த அலைகள் பற்றி ஓர் சுவாரசியமான விடயம் ஒன்றை கூறுகின்றேன். 100 வருடங்களுக்கு முன்பு வானொலிப் பெட்டி கண்டுபிடித்து உபயோகித்த போது அனுப்பப் பட்ட வானொலி அலைகள் இன்று கூட விண்வெளியில் பறந்து செல்கிறது! எனவே, அந்த அலைகளை ஏதாவது ஒரு ஏலியன் தனது வானொலிப் பெட்டியில் பெற்றுக்கொண்டால், அது 100 வருடங்களுக்கு முன்பு புவியில் ஒலித்த பாடலை கேட்கலாம்…


English Version

Introduction to Electromagnetic Radiation


There are a lot of things happening around us. There are many useless things visible to our eyes while some useful things are invisible. One such invisible thing is Electromagnetic waves. These Electromagnetic waves are always around us. Without these waves our modern world and technologies cannot exist. Radio, cell phones, Wifi, GPS navigation and many other gadgets cannot function without Electromagnetic waves. Let us learn about them in this Arivu Dose.

The Electromagnetic waves are classified according to their wavelength. One of them is Light. Other types are radio waves, micro waves, infrared rays, ultraviolet rays, X rays and Gamma rays. In our modern world, each wave is used in many different ways. Let us look at some examples. Radio waves make us listen to our favorite songs in a transistor. Microwaves help us to speak to a distant friend through a cell phone and stay connected. Infrared rays help us to operate the television through remote control. X rays are used to visualize the bones in the body. Gamma rays are used to treat some types of cancers. Thus each type of Electromagnetic waves serves its purpose.

The specialty about these Electromagnetic waves is that, when an Electromagnetic wave strikes an object, it produces 3 effects depending on its wavelength. The waves may get reflected, conducted or absorbed. For example, light gets reflected when it strikes a wall while radio waves pass through the wall. This is the reason why we are able to listen to songs and speak in cell phones even when the doors and windows are closed. Another surprising fact is that, the radio waves used when transistor was invented 100 years before is still floating in the outer space. If an Alien receives these radio waves, it can hear a song played on Earth 100 years before. Funny isn’t it?

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Inductiveload, NASA | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

10 Comments

 • SasiChandran - 10/17/2014, 2:39 PM

  Ungalathu migapperiya muyarchikku enathu valthukkal…!innum pala thagavalkalai anuppa endukiren sagothare…!

 • Mahendraselvan D. - 10/04/2014, 12:13 AM

  மின் காந்த அலைகள் பற்றிய நல்ல பயனனுள்ள தகவல், நண்பர்.

 • Harihar Balasubramanian - 02/18/2014, 4:07 AM

  So nicely written.

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/18/2014, 6:00 PM

   Thank you very much dear friend :) Harihar Balasubramanian

 • Gopalakrishnan Swaminathan - 02/17/2014, 7:18 PM

  ஏன்முழுவதாகப் படிக்கமுடியவில்லை . continue reading முடியவில்லை

  • Niroshan Thillainathan
   Arivu Dose – அறிவு டோஸ் - 02/17/2014, 9:01 PM

   அப்படியா? இந்தப் பக்கத்தை Reload செய்து பாருங்கள், சரி வரும்…

 • Amar Nath C - 02/17/2014, 5:11 PM

  Mikka nandri nanba:-) ithu enaku matum alla padikum ovvoruvurukum nichayam payanulla ondraga irukum enbathil thuliyum santhegam illai:-) ungal sevai vetri adaiya valthukal:-)

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/17/2014, 5:20 PM

   Amar Nath C இந்த வாழ்த்தை விட வேறு எனக்கு என்ன தேவை? மிக்க நன்றி நண்பா!!

 • Pon Santhosh - 02/17/2014, 4:40 PM

  கடைசிப் பத்தி அருமை.! ஆனால் மின் காந்த அலைகளால் தேனீக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இதனால் மகரந்த சேர்க்கையும் பாதிக்கப்படுகின்றது. இதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்பது என் கணிப்பு. தங்களுக்கு இதன் விவரம் தெரிந்தால் கூறவும்.!!!Niroshan Thillainathan

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/17/2014, 5:22 PM

   Pon Santhosh நீங்கள் சொல்வது உண்மை தான். இதை ஆங்கிலத்தில் Colony collapse disorder என்றும் கூறுவார்கள். முடிந்தால் அடுத்து வரும் அறிவு டோஸ் ஒன்றில் இதைப் பற்றி எழுதுறேன்… உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!