Natural Sciences Read in english

இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan on May 15th, 2014

இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்நமது இதயம், உடலிலுள்ள அனைத்து இரத்தக் குழாய்களுக்கும் இரத்தத்தைச் சுழற்சி செய்யும் ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மேலும் இது முதல்நிலை இரத்த ஓட்ட அமைப்புப் பகுதியாக உள்ளது. இன்றைய அறிவு டோஸில், நமது இதயம் எவ்வாறான வியக்கத்தக்க பல செயல்களை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

ஒன்று தெரியுமா…? இதயம் துடிப்பதற்கு மூளை தேவையில்லை; ஏன், உடலும் கூட தேவையில்லை. இதயத்திற்க்குச் சொந்தமாகவே மின்சார அமைப்பு உள்ளது. இதனால், மூளை இறந்து போன பின்பும் கூட சில நிமிடங்களுக்கு இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்! மேலும், உடலிலிருந்து நீக்கிய பின்பும், ஒரு குறுகிய நேரத்திற்குத் துடித்துக் கொண்டிருக்கும். அதுவும் குறிப்பாக பிராணவாயு (oxygen) இருக்கும் வரை இதயத்தால் துடிக்க முடியும்! இது அற்புதம் அல்லவா?

நமது இதயம் மிகவும் சுறுசுறுப்பான ஓர் உறுப்பு ஆகும், ஏனென்றால் அது ஒரு நாளைக்கு மட்டுமே 100,000 தடவை துடிக்கின்றது. சராசரி வாழ்நாள் முழுவதும், சுமார் 2.5 பில்லியன் முறை துடிக்கிறது. உங்கள் இதயம் சுழற்சி செய்யும் இரத்தம், இரத்த நாளங்கள் வழியாக சுமார் 100,000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது.

இரத்த அழுத்தம் இரண்டு அளவீடு ஆகும்: சிஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயம் துடிக்கின்ற போது ஏற்படும் அழுத்தம், மற்றும் இதயவிரிவமுக்கம் என்பது இதய துடிப்புகளுக்கு இடையே ஏற்படும் அழுத்தம். இந்த இரண்டு அழுத்தங்களை வைத்தே முறையாக இரத்த அழுத்தத்தை அளவிட முடியும், என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், சில ஆய்வுகள் இரண்டு கைகளிலும், இரத்த அழுத்த அளவீடு எடுத்தால் மட்டுமே, சரியான முறையில் இதய நோய் ஆபத்தைத் தீர்மானிக்க முடியும் என்று கூறுகின்றன.

இதய நோய்கள், துணையை இழந்த வயதானவர்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் ஆபத்து உள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஆண்களை விட பெண்களே அதிகமாக இதய நோய்களால் மரணிப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

உங்கள் உடலில் இருக்கும் இந்த அதிசயமான இதயத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? உங்கள் கருத்துகளைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Interesting facts about the human heart


Our heart is an important organ that circulates the blood to all the organs of the body. It acts as the primary organ of circulation. Let us learn about the fascinating functions of this wonder organ in this Arivu Dose.

Do you know the fact that you don’t need a body or a brain for the heart to function? Heart has its own electrical system. So it functions for few seconds even after brain death!  Also, a heart beats even after it has been removed from the body. It beats as long as there is oxygen available to it. Isn’t it minded blowing?

Our heart is a very active organ. It beats for about 100,000 times a day and about 2.5 billion times in a life time. The blood it pumps travel in the blood vessels for a distance of 100,000 km.

Blood pressure is a measurement of two factors. Systolic pressure is the pressure created when the heart beats while diastolic pressure is the one between two heart beats. Doctors say that both are necessary to measure the blood pressure correctly. Some studies say that blood pressure can be accurately measured to access the heart damages, only when the readings are taken from both the arms.

A recent research says that the probability for heart diseases doubles in old people who have lost their life partners. Another research states that women die of heart disease more than men.

What do you think about this amazing organ in your body? Drop your comments below.


Patrick J. Lynch, medical illustrator | Creative Commons by-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

11 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 05/16/2014, 9:14 PM

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பர்களே Mohamed Fasmin, Sultan Mohammed Manzil, Sana Samsath Banu, Ganesh Kumar, Ramaraj Raj, Naga Raj, Raj Prabhu, திவாகர் ரகுநாதன், Ragu Kumar, Gánésh Jaï!

  • திவாகர் ரகுநாதன் - 05/16/2014, 6:43 PM

    நன்று

  • Mohamed Fasmin - 05/16/2014, 3:16 PM

    Thanks

  • Sultan Mohammed Manzil - 05/16/2014, 12:35 PM

    Thanks

  • Sana Samsath Banu - 05/16/2014, 5:11 AM

    Ippa than oru uruppadiyane vealapanni irukkai rozan
    N I am wish 4 u dr

  • Ganesh Kumar - 05/15/2014, 7:27 PM

    Interesting

  • Ramaraj Raj - 05/15/2014, 5:58 PM

    you are great

  • Ragu Kumar - 05/15/2014, 5:25 PM

    Thanks

  • Naga Raj - 05/15/2014, 5:19 PM

    thanks

  • Gánésh Jaï - 05/15/2014, 1:41 PM

    Useful news bro…thnkq

  • Raj Prabhu - 05/15/2014, 1:36 PM

    Supear news