Natural Sciences Read in english

மூளையைப் பற்றிய சில சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan on June 2nd, 2014

மூளையைப் பற்றிய சில சுவாரசியங்கள்நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்பதைப் பல அறிவு டோஸ்களைப் படித்து அறிந்து இருப்பீர்கள். இன்றைய அறிவு டோஸில் கூட நமது மூளையைப் பற்றிய வேறு மிகவும் வியப்பூட்டும் தகவல்களை அறியத் தருகிறேன்.  

 1. நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது உங்கள் மூளை புதிய கோணங்களில் சிந்தித்தலை அதிகமாக நிகழ்த்துகிறது. சோர்வாக இருந்தால், கவனம் அதிகமாகச் சிதறும். உங்களது நோக்கம் ஒரே கோணத்தில் நிலைத்திருக்காது. இந்த நேரம் நீங்கள் புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப் புதிய செயல்முறைகளை உருவாக்க முடியும்.
 2. மன அழுத்தம் மூளையின் அளவை சுருக்கி சிறிதாக்கி விடும்.
 3. மூளை பல பணிகளை ஒரே நேரம் செய்வது சாத்தியமற்றது. பல விதமான பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் பொழுது, தவறு வீதம் 50க்கு உயரும். மேலும் அவ்வேலைகளை செய்து முடிக்க இரண்டு மடங்கு அதிகமான நேரம் எடுக்கும்.
 4. குட்டித்தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை நாளுக்கு நாள் மேம்படுத்த உதவும். நாம் தூங்கும் போது மூளையின் வலது பக்கம் “ஒழுங்குப்படுத்தல்” கடமைகளை கையாளுகிறது. அதாவது, இடது பக்க மூளை ஓய்வு எடுக்கும் பொழுது, வலது மூளை, அன்றைய தினத்தில் நடந்த செய்திகளை நீண்ட கால ஞாபகச் சேமிப்பில் மாற்றி, அந்த நினைவுகளை உறுதிப் படுத்தும்.
 5. தியானம் மூளையை அமைதிப் படுத்தும். மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும்.
 6. நாம் தவறுகள் செய்யும் மனிதர்களையே அதிகம் விரும்புகிறோம். இந்த முடிவை ஆராய, உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். அதில் ஒரு பதிவு செய்த விநாடி வினா நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் தவறுதலாகத்  தனது தேநீர்  கோப்பையை உடைத்துவிட்டார். மக்களிடம் எந்தப் போட்டியாளருக்கு உங்கள் ஆதரவு எனக் கேட்ட பொழுது, கோப்பையை உடைத்தவரையே மக்கள் அதிகம் விரும்புவதாகத் தெருவித்தனர்.

நமது மூளை பற்றிய எவ்வளவோ விடயங்கள் இன்னும் ஆராய உள்ளது, நண்பர்களே. ஆனால் நமது மூளை ஓர் அதிசயம் என்பதில் ஒரு நாளுமே சந்தேகம் இருக்கப் போவதில்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Interesting facts about the human brain


You would have learnt through many Arivu Dose that there is nothing more wonderful than the human brain. Let me tell you some more interesting information about the brain in this Arivu Dose.

 1. When you are tired, your brain thinks in a different angle more frequently. When you are tired you get distracted. You will not be able to focus on a thing. At this time you may choose a new path and create a new process.
 2. Mental stress will reduce the size of the brain.
 3. It is impossible for the brain to multitask at the same time. During multitasking the probability of committing an error increases by 50%. Also it takes double the amount of time to complete the job.
 4. Short naps help to improve your brain’s ability. When we are asleep, the right side of brain handles the organizing work. While the left brain rests, the right side of the brain transfers the daily happenings to our long term memory and save them.
 5. Meditation calms our mind and refreshes the brain.
 6. We like people who make mistakes. To study this fact, Psychologist Eliot Aronson carried out a survey. He telecasted a recorded Quiz show. One of the competitors broke a tea cup by mistake. When he asked the people who they liked more, most of them favoured the guy who broke the tea cup.

There are so many things to be discovered about our brain. But there is no doubt that our brain is a great wonder. Post your comments below.


John A Beal, PhD Dep't. of Cellular Biology & Anatomy, Louisiana State University Health Sciences Center Shreveport | Creative Commons by-2.5, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

 • Danushan Kumar - 06/06/2014, 6:40 AM

  Some use full information dude

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 06/05/2014, 11:28 PM

  உங்கள் கருத்தைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Mc Lojan சுமதி சுசன் Tamil Selvan R Kotthu Neru Ragunathan Santosh Barath Roshan

 • சுமதி சுசன் - 06/03/2014, 1:10 PM

  beneficial fact.. :) thank u..

 • Barath Roshan - 06/03/2014, 12:30 PM

  It’s 100% true

 • Tamil Selvan R - 06/03/2014, 5:35 AM

  Thanks

 • Kotthu Neru - 06/02/2014, 8:16 PM

  nallam

 • Ragunathan Santosh - 06/02/2014, 5:39 PM

  i know now replace our brain also. but the memories and thinking are different to other

 • Mc Lojan - 06/02/2014, 1:12 PM

  Its not surprise…you can replace any organ in your body…but you can’t replace your brain…