Natural Sciences Read in english

நீலக்கல்லும் மாணிக்கமும்

By Niroshan Thillainathan on April 25th, 2014

நீலக்கல்லும் மாணிக்கமும்உங்கள் எல்லோருக்குமே நீலக்கல் (sapphire) மற்றும் மாணிக்கக்கல் (ruby) எனப்படும் இரு கற்களை நன்றாகவே தெரிந்து இருக்கும், அல்லவா? இதிலும் நீலக்கல் கரு நீல நிறத்திலும், மாணிக்கம் சிவப்பு நிறத்திலும் உள்ளது என்பது மட்டும் இல்லாமல், இரு கற்களுமே விலை உயர்ந்த கற்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், நாம் பொதுவாக அறியாத ஒரு விடயம் என்ன தெரியுமா? இவ்விரு கற்களும் உண்மை சொல்லப்போனால் ஒரே வகையைச் சேர்ந்தது என்பது தான்!

இது புரிவதற்கு முதலில் குருந்தம் (corundum) என்றால் என்னவென்று பார்க்கலாம். குருந்தம் என்பது அலுமினியம் ஒக்சைட்டின் படிம வடிவமாகும். இது இயற்கையில் நிறமற்றதாக இருந்தாலும், அதில் அசுத்தம் படிவதால் பல வண்ணங்களைப் பெறுகிறது. இந்தக் குருந்தம் சிவப்பு நிறத்தில் இருந்தால், அதை நாம் மாணிக்கம் என்கிறோம். இதே குருந்தம் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், பட்பராட்ச்‌சா (padparadscha) என்று வழங்கப்படும். மற்று அனைத்து வண்ணக் கற்களையும் நீலக்கல் என்று தான் குறிப்பிடுவர். எனவே, நீலக்கல் நீல நிறம் மட்டும் உடையதில்லை. இது பச்சை நிறத்தையும் சேர்த்து, பல வண்ணங்களில் இருக்கின்றது. குருந்தம் அழகுக்கு மட்டுமல்லாமல், அதன் கடினத்தன்மையாலும் பரவலாக அறியப்படுகிறது. இது கிட்டத்தட்ட அனைத்துத் தாதுப் பொருள்களயும் வெட்டும் கடினமான பொருள் ஆகும். இது ரஷ்யா, ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் இந்தியாவில் வெட்டியெடுக்கப் படுகிறது.

எனவே, நிறம் வேறதாக இருந்தாலும், இந்தக் கற்கள் கருவில் ஒன்றானவை தான். இந்த விடயம் உங்களுக்கு முன்பே தெரிந்ததா நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about sapphires and rubies


All of us know the gemstones, Sapphire and Ruby.  We also know that Sapphire is blue in color and ruby is red in color. Both these gemstones are very valuable. But what we don’t know is the fact that both of them belong to the same type of gemstone!

To understand this fact let us learn about Corundum. Corundum is the sedimentary form of Aluminium Oxide. Though it is colorless in its pure form, it attains various colors based on the impurities that get added to it. When this Corundum is in red color, we call it ruby. If it is in orange color, it is called as Padparadscha. Rest of the forms is called as Sapphire. So, Sapphire exists in various colors including green. Corundum is not only known for its beauty but also for its hardness. It has the ability to cut almost all minerals. It is mined in Russia, Zimbabwe, Sri Lanka and India.

Though the color varies, the origin of these gemstones is the same. Do you know this interesting fact already? Drop your comments below.


Mario Sarto | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • திவாகர் ரகுநாதன் - 04/26/2014, 5:51 AM

    Mhum