Behavioural Sciences Read in english

உடல் மொழி பற்றிய சில தகவல்கள்

By Niroshan Thillainathan on April 27th, 2014

உடல் மொழி பற்றிய சில தகவல்கள்ஒரு மனிதனின் உடல் மொழி என்றால் என்ன என்று தெரியுமா? அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் அனைத்தும் உடல் மொழி ஆகும். விஞ்ஞானம் என்ன கூறுகின்றது என்றால், ஒருவரது உடல் மொழி அவர் தன்னைப் பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகின்றது என்பது தான். சக்திவாய்ந்த மனிதர்கள் மிகவும் துணிவுள்ளவர்கள். இவர்களிடம் உயர்வடையும் விருப்பம் அதிகளவில் உள்ளதால், ஆபத்து வாய்ந்த வேலைகளையும் செய்யத் தயங்க மாட்டார்கள். மேலும் இவர்கள், தங்களைச் சக்தியற்றவர்களாகக் கருதும் மனிதர்களை விட, அதிகம் நம்பிக்கை உடையவர்களாய் இருப்பர்.

உண்மை சொல்லப் போனால் இந்தத் தகவல்கள் அனைத்தையும் ஒரு மனிதரின் உடல் மொழியிலிருந்தே அறிந்து விடலாம்! தங்கள் அதிகாரத்தில் நம்பிக்கை உடைய மக்கள் தங்களது உடலை விறைப்பாக வைத்திருப்பர்; மேலும் அவர்கள் பெரிய கையசைவுகளைக் கொண்டே தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர். இவர்களுக்கு நேர் மாறாக, தன்மேல் நம்பிக்கை இல்லாத மக்கள் உடலைக் குறுக்கி வைத்திருப்பர். சிறு கையசைவுகளையே உபயோகிப்பர்.

வேதியியல் ரீதியாக, உயர் சக்தியுள்ள மக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு அதிகமாக இருக்கும்; மேலும் கார்டிசோல் (cortisol) அளவு குறைந்திருக்கும். இதில் வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், உயர்- அல்லது குறைந்த சக்தி உடையவர் போல நடிப்பதால் கூட நமது உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்பது தான். நீங்கள் வெறும் இரண்டு நிமிடங்கள் அதிகாரம் உடையவர் போல் நடித்தாலும் கூட, உங்களது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என்றும் கார்டிசோல் அளவு குறைகிறது என்றும் கண்டுபிடித்தர். இதுவே, அதிகாரமற்ற மனிதர்களின் உடல் மொழிகளைப் பயன்படுத்தும் பொழுது விளைவு எதிரானதாக இருந்தது.

எனவே, நமது உடல் மொழியின் மாற்றங்கள் நமது சிந்திப்பையும், மனதையும் மாற்றிவிடுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.தீனி நீங்கள் கூறுங்கள், உங்களுக்கு நன்றாகத் தன்னம்பிக்கை இருக்கிறதா இல்லையா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about body language


Do you know what is meant by ‘body language’?  It’s nothing but your body postures, gestures and eye movements while you speak with others. Science states that one’s body language will express how one feels about oneself. Powerful people are courageous. As they have high expectations, they don’t hesitate to take risks. Also, they are more hopeful than people who think themselves as weak and powerless.

In reality, it is possible to deduct all these information from someone’s body language itself. People who believe in their authority will always have a stiff posture. They express their thoughts through big gestures. In contrast, people with low self confidence will shrink their body and use small gestures.

Chemically, Powerful people have more level of testosterone and low cortisol in their body. It is surprising to note that, even acting as powerful person can bring bodily changes. It has been found that, acting as a powerful person for just 2 minutes can increase the testosterone level and lower the cortisol level in your body. When you act powerless, opposite changes happen in your body.

Thus, the changes in our body language can change our thoughts and feel. Are you a confident person or not? Post your comments below.


Adam Jones | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

4 Comments

  • prabhakaran - 11/13/2014, 5:49 PM

    gd news….

  • Muthu Sasi - 04/28/2014, 7:23 AM

    am impressed

  • Sakthi Rajan - 04/28/2014, 7:16 AM

    its real & good information ….

  • M Hari Haran - 04/27/2014, 1:45 PM

    அருமை