Natural Sciences Read in english

பூச்சிகளுக்கு வலியே தெரியாது

By Niroshan Thillainathan on July 16th, 2014

பூச்சிகளுக்கு வலியே தெரியாது“உடல் அல்லது மனதில் ஏற்படக்கூடிய தேவையில்லாத உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் தான் வலி” என வலிக்கு ஒரு தனி வரையறையே உண்டு. இவ்வாறான வலி ஒவ்வொரு உயிரினத்தினாலும் வித்தியாசமாக உணரப்படும். ஆனால், இந்த வலியுணர்வு விலங்குகளுக்கு எந்த அளவில் உள்ளது என்பது குறித்து சரியாகக் குறிப்பிட முடியாததால், அதற்கெனத் தனியாக ஆராய்ச்சியே செய்யப்பட்டது. இதில் நம் உடலில் வலிக்கு ஏற்படும் எதிர்விளைவுகளைப் போல பிற உயிர்களிடம் வலியுணர்வின் தாக்கம் எந்த அளவில் உள்ளது என சோதனை செய்யப்பட்டது. உதாரணமாக ஒரு நாயினை ஊசியால் குத்தும்போது அது வலிக்கு பயந்து ஓடிவிடும் அல்லது எதிர்விளைவுகளைச் செய்யும்.

ஆனால், பூச்சிகளுக்கு வலியை உணரும் தன்மை சிறிதளவும் இல்லை என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அது தான் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது! நாசிசெப்டார்கள் (nociceptor) மட்டுமே நமது வலியுணர்வினை மூளைக்குக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. ஆனால் இந்த நாசிசெப்டார்கள் பூச்சிகளுக்கு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் பெரும்பாலான பூச்சிகள் மற்றும் விலங்குகள் வலியினை உணரும் திறனற்றவை.

எனவே, நம்மை துன்புறுத்தும் சில விலங்குகளையும், பூச்சிகளையும் நாம் என்ன தான் செய்தாலும் அதற்கு வலிக்காது என்பது உண்மை ஆகிவிட்டது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? உங்கள் கருத்தை கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

Insects don't feel pain


Pain is defined as “the unwanted emotions and experiences occurring in the body and mind”.  The pain is perceived differently by different organisms. As the level of pain perception in animals is not known, a research was conducted on it. In this research, similar to the reaction in humans to pain, the effects of pain on other organisms were studied. For example, when a dog is pricked with a needle it either runs or reacts in a different way.

Can you believe that insects cannot perceive pain? But it has been proved so! Only nociceptors have the ability send pain signals to the brain. But it has been found that these nociceptors are absent in insects which means most of the insects and animals are unable to perceive pain.

So it has been proved that some of the insects and animals which harm us, will not feel pain whatever we do to them. What do you think about this? Post your comments here.


Jbarta | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

35 Comments

  • Gopi Nath - 07/16/2014, 1:04 PM

    ADIPATTA

  • Gopi Nath - 07/16/2014, 1:04 PM

    AANA NERAYAPOOCHI THUDIKUME ETUKKU ENNA KARANAM