Natural Sciences Read in english

எல்லாமே தலை கீழாகத் தெரிகிறதே

By Niroshan Thillainathan on March 7th, 2014

எல்லாமே தலை கீழாகத் தெரிகிறதேநண்பர்களே, உங்கள் கண்களைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விடயத்தை உங்களுக்கு அறியத் தருகிறேன், படிக்கின்றீர்களா…? நமது கண்கள் இயற்கையின் ஓர் அதிசயம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! நாம் ஒரு பொருளைப் பார்ப்பதற்கு நமது கண்கள், நமது மூளை மற்றும் ஒளி தேவைப்படுகின்றது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பொதுவாக சூரியனிலிருந்து வரும் ஒளி நமது சூழலில் உள்ள ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை நாடி வருகிறது. அந்த ஒளிக்கதிர்கள் முதலில் விழி வெண்படலம் எனப்படும் cornea, பின் கண்மணி (pupil), பின் வில்லை (lens) ஊடாகச் சென்று retina எனப்படும் விழித்திரையில் படுகிறது. விழித்திரையில் படும் இந்த ஒளிக்கதிர்கள் உடனடியாக மின் சமிக்ஞைகளாக (electrical signal) மாறி நமது மூளைக்கு அனுப்பப் படுகின்றன. அத்துடன் நமக்கு அந்தப் பொருள் தெரிகின்றது.

ஆனால், இதில் உள்ள சுவாரசியாமான விடயம் என்ன தெரியுமா? ஒரு பொருளில் பட்டுத் தெறித்து வரும் ஒளி, நமது விழித்திரையில் படும் போது அந்தப் பொருள் உண்மையில் தலை கீழாகத் தான் வந்து சேர்கின்றது. இப்படி தலை கீழாக இருக்கும் படத்தை நமது மூளை தான் தலை கீழ் இல்லாமல் சரியான முறையில் காண்பிக்கின்றது! இதை நீங்கள் கூட அவதானிக்கலாம்! அடுத்த முறை நீங்கள் ஒரு கைக்குழந்தையுடன் விளையாடும் போது, இதை அவதானித்துப் பாருங்கள். அந்தச் சிறு குழந்தை உங்கள் விரலைத் தொட முயற்சித்தால், உங்கள் விரலைத் தொடுவதற்குப் பதிலாக அதற்கு அருகே தான் தொடும். அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை, அந்தக் குழந்தைக்கு எல்லாமே ஆரம்பத்தில் தலைகீழாகத் தெரிகின்றது என்பது தான். ஆனால், கொஞ்சக் காலம் போகப் போக அந்தக் குழந்தையின் மூளை எல்லாவற்றையும் சரியான முறையில் காண்பிக்கத் தொடங்கிவிடும்.

நண்பர்களே, இந்த அறிவு டோஸில் கூறிய விடயம் பொதுவாக எல்லோருக்கும் தெரியாது. உங்களுக்கு இது முன்பே தெரிந்ததா இல்லையா என்று கீழே எழுதி விட்டுச் செல்லுங்கள்.


English Version

The human eye sees everything upside down


The human eye remarkably demonstrates the wonders of the human body. Generally, the visual ability of a human is a result of a complex interaction between light, eyes and the brain. Vision begins when light rays are reflected off an object and enter the eyes through the cornea and the pupil. Then the light rays are passing through the lens and focus finally on the retina. Electrical impulses are being generated as soon as the light rays are focused on the retina, which leads the optic nerves to send these impulses to the brain where an image is produced. Shortly, once light reaches our eyes, signals are sent to our brain, and our brain deciphers the received information. The whole pathway of light to the eyes and the way an image is being generated in the brain are very unique. This is mainly because the image formed on the retina is upside-down! The human brain will eventually adjust this upside-down image and make it right-side-up. It is believed that for the first few days, babies see everything upside-down, thus we can observe this unique phenomenon on their eyes while playing with them. This is because they are not used to the complex vision pathways at first, however their brain will eventually get used to this mechanisms of converting upside-down images to right-side up.

Did you know about the science behind the human eye sight before? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Micky Zlimen | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

22 Comments

 • Kalai Azhgan - 09/17/2014, 8:45 PM

  Good infremation, i dont know

 • Sathish Sathi - 09/17/2014, 8:08 PM

  fine

 • Rajesh Kanna - 09/17/2014, 7:39 PM

  Now only i know this information thank u

 • Thanga Manonmani Ramasamy - 09/17/2014, 7:38 PM

  கண் தானம் செய்யும் போது கார்னியா மட்டுமே எடுக்கப்படும் . கண்களை முழுமையாக எடுப்பதில்லை என்பதை தெரியப்படுத்துங்கள் @ Arivudose.

 • Saru Latha - 09/17/2014, 7:28 PM

  I know this news in my school studies. Thank u remain for this

 • Thanga Manonmani Ramasamy - 09/17/2014, 7:28 PM

  Ya . I know.

 • Anonymous - 09/17/2014, 7:16 PM

  புதுசா ஏதாவது கண்டுபிடுச்சு சொல்வீங்கன்னு பார்த்தா வளருகிற ஐந்தாம் கிளாஸ் குழைந்தளுக்கு தெரிஞ்சத சொல்றிங்களே

 • Fayas Ahamed - 09/17/2014, 7:05 PM

  இது நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். ஆனால் குழந்தைகளுக்கு தலைகீழாக தெரிவது என்பது புதிதாக வந்தவன் உள்ளது.

  மேலும் மனித மூளை பொருள்களை சரியாக காண பயன்படுவோதோடு மட்டுமில்லால் பொருளை பற்றிய குணாதிசியங்களையும் நமக்கு தெரியப்படுத்தும்.

 • Thenmozhi Twinkle - 09/17/2014, 6:40 PM

  i knw it already .but anyhow thanks fr reminding ths info

 • Kalai Selvan - 09/17/2014, 6:35 PM
 • Nivetha Murugan - 09/17/2014, 6:23 PM

  i ven’t heard tis b4 thank u :-)

 • Mohamed Munshif - 09/17/2014, 6:17 PM

  allah thandhe amanizem

 • Jaya Vel - 09/17/2014, 6:16 PM

  It’s true. I know already. Thanks.

 • Jothi Kalai - 09/17/2014, 6:13 PM

  very helpful arivu doss

 • Jothi Kalai - 09/17/2014, 6:13 PM

  very helpful arivu doss

 • Mani Nirmal - 09/17/2014, 5:40 PM

  It’s True

 • Parthipan Parthi - 09/17/2014, 5:36 PM

  ஆச்சர்யமாக இருக்கிறது..தகவுகளுக்கு நன்றி ..

 • Kumanan Giri - 03/07/2014, 4:48 PM

  Sixth std science la paduchuruken

 • Ramaraj Raj - 03/07/2014, 4:48 PM

  thanks

 • Dhivya Ram - 03/07/2014, 3:33 PM

  learned that n zoology.

 • Hemaraj Ravintharan - 03/07/2014, 2:12 PM

  nalla puthu thagaval.

 • Rinfath Rifah - 03/07/2014, 1:47 PM

  thariyum ivvidayam but neenkal sonna utharanam yanakku thariyathu thax