Natural Sciences Read in english

மனித கண்ணினால் சுமார் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்

By Niroshan Thillainathan on December 1st, 2014

Human eye has the ability to distinguish roughly 10 million different colorsநமது உடல் இயற்கையின் மாபெரும் அதிசயத்தில் ஒன்று என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணத்தை இந்த அறிவு டோஸில் கூட நீங்கள் அறிந்துகொள்ளலாம். அது வேறு ஒன்றும் இல்லை, நண்பர்களே! ஒளி எந்த வகையில் இருந்தாலும் பரவாயில்லை, எவ்வளவு கடினமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை, எத்தனை வண்ணங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் கவலை இல்லை, நமது கண்களைக் கொண்டு எத்தனை விதமான வண்ணங்களையும், எத்தனை கடினமான ஒளியினையும் கூடப் பிரித்து நமக்குத் தெளிவாகப் பார்க்க முடியும்.

வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட ஒளிக்கற்றைகள் நமது கண்ணினால் வெறும் மூன்றே மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவதே இதற்குக் காரணம். அந்தக் காட்சிப் பகுதியின் ஒவ்வொரு பகுதியிலும், மூன்று வகையான கூம்புகள் அந்த காட்சிக்கு ஏற்றவாறு ஒளிக் குறிகளைப் பெறுகின்றன. இந்த ஒளிக்குறிகள் “Tristimulus values” என்று அழைக்கப்படுகின்றன. இதன் துணைகொண்டு கண்கள் ஒளியினை அதன் அலைநீளத்துடன் தொடர்புபடுத்தி உணருகின்றன. இதனால் வெவ்வேறு அலைநீளங்கள் கொண்ட நிறங்களை தெளிவாகப் பிரித்தறிய முடியும்.

இதனால் தான் நமது சாதாரண கண்களினால் கூட ஏறக்குறைய 10 மில்லியன் வண்ணங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆச்சரியம் இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Human eye has the ability to distinguish roughly 10 million different colors


There is no doubt that our body is a wonderful creation of the nature. You can learn the reason behind such a belief in this Arivu Dose. Let the light be of any type, any intensity and any combination of colours. It is not a problem because our eyes have the ability to see innumerable colours and to isolate even hard light and make us see them clearly.

The reason behind this is that the light with various wavelengths gets segregated to only three segments. Each part in that visual field has three types of cones which receive the light signals depending on the vision. These light signals are called “Tristimulus values” with the help of which the eyes relate the wavelength with the light and perceive it. This helps to distinguish colours of different wavelengths.

This is the reason why scientists say that our eyes have the ability to distinguish about 10 million colours. Isn’t this fact surprising? Post your comments about this Arivu Dose.


Jalal Volker | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.