Natural Sciences Read in english

பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?

By Niroshan Thillainathan on May 29th, 2014

பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது? ஒரு சராசரி வாளியினுள் எவ்வளவு தண்ணீர் இருக்கக்கூடும் நண்பர்களே? என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து லிட்டர் இருக்கும், சரி தானே? இதுவே நமது பிரம்மாண்டமான புவியில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பூமியில் நீர் நிறையவே இருக்கின்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம், ஆனால் இந்த நீர்ப் பொருள் 1,260,000,000,000,000,000,000 லிட்டர் அளவு என்பது பலருக்குத் தெரியாத ஒரு விடயம் ஆகும். இதில் என்ன விசேஷம் என்றால், இந்தத் தண்ணீர் ஒரு இடையறாத சுழற்சியைக் கொண்டுள்ளது. அது, கடலில் இருந்து ஆவியாகிக் காற்று மூலம் பயணித்து, நிலத்தில் மழையாக இறங்கி, பின்னர் மீண்டும் கடலில் பாய்கிறது.

நமது உலகின் சுமார் 70 சதவீதமான நிலப் பரப்பு கடல்கள் மற்றும் சமுத்திரங்களால் ஆனது. மற்றும் கடலின் சராசரி ஆழம் பல ஆயிரம் அடி ஆகும். பூமியில் உள்ள தண்ணீரில் 98 சதவீதம் சமுத்திரங்களில் உள்ளது; அதன் உப்புத் தன்மை காரணமாகவே அதைக் குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. இரண்டு சதவீதத் தண்ணீர் குடிநீராக உள்ளது, ஆனால், இந்த 2 சதவீதத்தில் 1.6 சதவீதம், துருவ கட்டிகள் மற்றும் பணிப்பாறையில் உறைந்து கிடக்கிறது. 0.36 சதவீதம் நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீராக இருக்கிறது. புவியில் இருக்கும் மொத்த நீரில், 0.036 சதவீதம் மட்டுமே ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படுகிறது.

மீதியுள்ள நீர், மேகங்கள் மற்றும் நீராவியாகக் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. மேலும், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் இருக்கிறது. ஏன், உங்கள் உடல் கூட 65 சதவீதம் நீரால் தான் ஆனது, நண்பர்களே. நீர் இல்லாமல் நமது புவியில் உயிரே தோன்றியிருக்காது என்பது மறுக்கமுடியாத ஓர் உண்மை ஆகும்!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How much water is on and in the earth


How much water can a medium size bucket hold? Around 5 to 10 litres, right? Do you know how much water is in this whole world? We all know that there is a lot of water on the Earth. But most of us don’t know that it is around 1,260,000,000,000,000,000,000 litres. It is surprising to know that this water undergoes a constant cycle.  It evaporates from the seas into vapour, travels in air and comes back to earth as rain and reaches the sea finally.

70% of the Earth’s surface is covered by seas and oceans. The average depth of sea is around 1000 feet. 98% of the Earth’s water is in ocean. Due to its salinity, we are unable to use it for drinking. 2% is available as drinking water of which 1.6% has been locked up in the polar icebergs. 0.36% water resources are the wells and underground water. Of the total water on the Earth, only about 0.036% is seen in the lakes and rivers.

The rest of the water is in the clouds and as water vapour in the air.  It is also seen in the body of plants and the animals. 65% of our body weight is made up of water. It is an unquestionable truth that, without water there would not have been any life on Earth.

Did you like this Arivu Dose? Post your comments below.


Ninjakeg | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/05/2014, 11:09 PM

    உங்கள் கருத்தைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Karuppu Roja Jerin Jery Jj Bala Muruga Ashok Kumar Nagaraj Nagu Gánésh Jaï Angel Sathya

  • Jerin Jery Jj - 05/30/2014, 12:28 PM

    super

  • Bala Muruga - 05/30/2014, 10:23 AM

    Thnx 4 u

  • Ashok Kumar - 05/30/2014, 6:55 AM

    Thanks for ur information.

  • Nagaraj Nagu - 05/30/2014, 4:36 AM

    Hmm…I like your good information….

  • Gánésh Jaï - 05/29/2014, 2:40 PM

    Thank u for u r information

  • Karuppu Roja - 05/29/2014, 2:35 PM

    haaaa mastar thala suthuthu master ithu unamaithanannu nampuran put manasu eathuka marukuthu

  • Angel Sathya - 05/29/2014, 1:29 PM

    Supar