Natural Sciences Read in english

நமக்குள்ளும் தங்கம் உள்ளது

By Niroshan Thillainathan on May 22nd, 2014

எமக்குள்ளும் தங்கம் உள்ளதுஒன்று தெரியுமா நண்பர்களே? நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கும் பொழுதே நமக்கு சொந்தமாகக் கொஞ்சம் தங்கத்தையும் எடுத்துக் கொண்டே வருகிறோம்! நமது உடலில் 0,0002 கிராம் தங்கத் துகள்கள் உள்ளது. இதில் பெரும்பான்மையானது நமது இரத்தத்தில் கலந்து உள்ளது. எனவே, நீங்கள் ஒரு 8g தங்கக் கட்டி செய்யப் போதுமான இரத்ததைச் சேகரிக்க, சுமார் 40,000 மக்களின் இரத்தத்தை முழுதுமாக உறிஞ்சு எடுத்தால் தான் முடியும். ஆனால், தயவு செய்து அப்படி ஒன்றும் செய்துவிடாதீர்கள் நண்பர்களே :D!

மனித உடலில் மட்டும் இல்லை, வேறு எதிர்பாராத இடங்களிலும் நீங்கள் தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். டக்ளஸ் ஃபிர் (Douglas Fir) மற்றும் ஹனிசக்குள் (Honeysuckle) போன்ற சில தாவரங்கள் மண்ணிலிருந்து மிகவும் திறமையாகத் தங்கத்தை உறிஞ்சு எடுக்கிறது. ஆனால், இந்தத் தாவரங்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது என்றால் அது லாபமாக முடியாது. தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்குத் தேவைப்படும் பணமோ இதில் இருக்கும் தங்கத்தை விட அதிகமானது!

உலகிலேயே மிக அதிகமாகத் தங்கத்தைக் கொண்ட சுரங்கம் கடல்கள் தான். இங்கே, 10 கோடி டன் தங்கத் துகள்கள் அங்கும் இங்கும் என்று மிதந்து கொண்டே இருக்கின்றது. பார்த்தீர்களா நண்பர்களே, இதைத் தான் சொல்வார்கள் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை என்று!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How much gold is found in the human body


Hi friends! Do you know the fact that when we were born in this world we also brought some amount of gold to this world? Our body has 0.0002 gm of gold particles in it. Most of it is present in our blood. So, you can make a gold block of 8 gm if you can suck the blood of 40,000 people. Please don’t try this ever :D!

You can find gold in so many unexpected places other than the human body. Some of the plants like the Douglas fir and Honeysuckle suck the gold out of soil very efficiently. But it is not beneficial to isolate the gold from these plants because the money spent on the process is so much more than you would get from the gold.

The world’s largest gold mines are the seas. There are about 10 crore tons of gold particles floating here and there on the surface.

Did you like this interesting Arivu Dose? Post your comments below.


Eva Rinaldi | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • Antony Vincent Saga - 05/23/2014, 5:38 PM

    daily oru dose kudu bro…

  • Madhumitha Mital - 05/22/2014, 11:09 PM

    That is right.

  • Ra Ni Thasan - 05/22/2014, 6:33 PM

    இதைத்தானே நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்….. தங்கத்துக்கு ஆசை படுபவர்களேல்லாம் பேய்கள் என்று…….பேய்கள் இரத்தத்தைதானே தேடி அலைகின்றது…..

  • Deepan Reddy - 05/22/2014, 5:07 PM

    :O

  • Subramanyam Nishanthan - 05/22/2014, 4:58 PM

    Verry good

  • Arun Kumar - 05/22/2014, 2:03 PM

    Vada poche