Social Sciences Read in english

இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

By Niroshan Thillainathan on March 7th, 2015

How many people have ever lived on this planet? எனது அறிவு டோஸ்களை விரும்புவோருக்கு நன்றாகவே தெரியும், நான் எப்பொழுதும் ஏதும் வித்தியாசமான கேள்விகளுக்குப் பதில்களை தேடுபவன் என்று. அது போன்று தான் இந்தக் கேள்வியும் கூட. உங்களில் யாராவது இன்று வரை நமது உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? இல்லையா? சரி பரவாயில்லை, இன்று அதற்குரிய பதிலை நானே உங்களுக்குத் தருகிறேன்.

இந்த உலகத்தில் இதுவரை மொத்தம் எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்? இப்படியெல்லாம் யார் சிந்திப்பார்கள் என நீங்கள் யோசிக்கலாம்! ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி யோசித்து அதற்கு விடையும் கூட உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். அதன்படி உலகில் இன்று வரை சுமார் 108 பில்லியன், அதாவது 108,000,000,000 மக்கள் பிறந்து வாழ்ந்து வந்துள்ளனர்! நினைத்துப் பார்க்கவே தலை சுற்றவில்லையா?

இதற்கான கணக்கினை கி.மு. 50,000 இலிருந்து தொடங்கினர். அப்போதுதான் நவீன மனிதர்கள் ஆகிய ஹோமோ சேப்பியென்ஸ் (homo sapiens) தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன், வாழ்க்கைக்குரிய ஆதாரங்களைப் பெருகிக்கொண்டே வந்ததால் நாம் தற்போது இவ்வளவு அதிகமான மக்கள் தொகையில் இருக்கிறோம். இதனை பின்வரும் கால அட்டவணை மூலம் நீங்கள் அறியலாம்.

1. கி.மு 8,000 – 5 மில்லியன் மக்கள்

2. கி.பி 1 – 300 மில்லியன் (45 மில்லியன் – ரோமன் ஆட்சிக்குரிய பகுதியில் மட்டும்)

3. கி.பி 1650 – அரை பில்லியன்

4. 19 வது நூற்றாண்டு – 1 பில்லியன்

5. இன்று – 7.1 பில்லியன் மற்றும் கூடிக்கொண்டே செல்கிறது.

மொத்தமாக அனைத்தையும் சேர்த்தால் இதுவரை வாழ்ந்தவர்களுக்கான எண்ணிக்கை சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர முடிகிறது. சரி இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே! இந்த விஷயம் உங்களுக்கு முன்பே தெரிந்தது தானா? உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How many people have ever lived on this planet?


People who love my Arivu Dose know well that I am always in search of answers for unique questions. This is one such question. Have you ever thought about the number of people ever lived on our planet so far? If not, don’t worry! Let me give you the answer.

You may wonder if anybody would give a thought about the number of people ever lived. But surprisingly, the World Census Bureau has thought about it and has also found an answer to it. According to them about 108 billion people i.e. 108,000,000,000 people have born and lived on Earth. Isn’t it astonishing?

They started the population estimation from 50,000 BC. The modern human beings – Homo sapiens were believed to have originated by then. As humans developed and increased the resources necessary to survive during each period of time, our population has increased to the present number which can be understood from the list below.

1. 8000 BC – 5 million people

2. 1 AD – 300 million (45 million in the Roman Empire alone)

3. 1650 AD – Half a billion

4. 19th century – 1 billion

5. Today – Its 7.1 billion and still counting

When we add up the numbers, we can come to a conclusion that the answer is correct. Did you know about this surprising fact already? Did you like this Arivu dose? Post your comments below!

 


efes | Public Domain

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • THIRUGNANAM - 03/21/2015, 8:54 AM

    மனிதனுக்கு எத்தனை அறிவு இருக்கிது.
    5 OR 6