Behavioural Sciences Read in english

ஒவ்வொரு வருடமும் பூச்சிகளை உண்கிறோம்

By Niroshan Thillainathan on May 30th, 2014

ஒவ்வொரு வருடமும் பூச்சிகளை உண்கிறோம்பூச்சிகளை இப்பொழுதெல்லாம் மக்கள் சுய விருப்பத்துடனேயே உண்கிறார்கள். டட்சு-காரர்களோ இன்னும் ஒருபடி மேலே போய், இந்தப் பூச்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறார்களாம், அதுவும் உணவுக்காக இவற்றை உபயோகிப்பதற்கு. குறிப்பாக வெட்டுக்கிளிகள் மற்றும் உணவுப் பூச்சிகளை சில்லறை உணவகங்களில் கேட்டு வாங்கி சுவைத்திடலாம்.

சரி, இந்தத் தெரிந்தே உண்பவர்களை விடுங்கள். தங்களுக்கே தெரியாமல் எத்தனைப் பூச்சிகளை ஒவ்வொருவரும் உண்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பலர், அதில் நீங்களும், நானும் சேர்த்துத் தான், பூச்சிகளை உணராமலேயே நமது உணவுகளுடன் உண்கிறோம்! உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDI) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வருடத்திற்குச் சராசரியாக மக்கள் 1 பவுண்டு (அதாவது, 0.54 கிலோ) பூச்சிகளை உட்கொள்கிறார்களாம். இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் வேறு உணவுப் பொருட்களிலே கலந்திருக்கிறதாம்!

எடுத்துக்காட்டுக்கு, நிலக்கடலையில் செய்யப்படும் வெண்ணெயில் (Peanut Butter), ஒவ்வொரு 100 கிராமுக்கும் சராசரியாக 30 பூச்சிகளின் பாகங்களைக் கலப்பதற்கு FDIஅனுமதிக்கிறது. பழச்சாறில் ஐந்து பழ-ஈ (Fruit Fly) முட்டை, மற்றும் ஒன்று அல்லது இரண்டு முட்டைப்புழுக்களையும் (Larva) கலந்து கொள்ளலாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா நண்பர்களே? இதில் உள்ள பிரச்சனை என்ன தெரியுமா? இனி, நாம் சைவ உணவிலிருந்து பழச்சாறுகளையும் நீக்கி விட வேண்டும் என்பது தான்? இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? அதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How many insects do we eat every year


Nowadays, people eat insects voluntarily. The Dutch have gone one step ahead and have motivated the rearing of insects for food. You can ask for grasshoppers and other food insects in small hotels and taste them.

Forget these people. Do you know how many insects are being eaten without the knowledge of it? Many people, including you and me eat insects along with our food. FDI has released a report which says that on an average, people eat 1 pound (about 0.54 kg) of insects a year. Most of these insects are present in various food products.

For example, FDI allows 30 insect parts per 100gm of peanut butter. There may be 5 fruit fly eggs and one or two larvae in the fruit juices we drink.

Do you know what the problem in it is? We have to omit the fruit juices from the vegetarian list. What do you think about this Arivu Dose? Post your comments below.


Albert Backer | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

3 Comments

  • Prem Sundar - 05/31/2014, 3:33 PM

    Really shake

  • கல்யாணி கிருஷ்ணன் - 05/31/2014, 5:15 AM

    pazha chaaruku pathila pazhangalaiye vaangi veetil juice eduthu kudikkalam.

  • Thiru Arasu - 05/30/2014, 1:57 PM

    பூச்சுகளை சாப்பிடுவதால் பாதிப்புகள் இல்லயா