Natural Sciences Read in english

சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்

By Niroshan Thillainathan on February 12th, 2014

சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்இன்று சாப்பிட்டீங்களா…? என்ன சாப்பிட்டீங்க…? சரி, இது எல்லாம் போகட்டும், ஏன் சாப்பிட்டீங்க என்று உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? பசி காரணமாக சாப்பிட்டேன் என்று சிலர் சொல்வர். வேறு சிலர் சக்தி பெறுவதற்காக சாப்பிட்டேன் என்று கூறுவர். மேலும் சிலர் சொல்வார்கள் சாப்பிடாமல் விட்டால் நாம் இறந்துவிடுவோம் என்று. மூன்று காரணங்களுமே முற்றிலும் உண்மைகள் தான். ஆனால், ஒரு வேளையோ அல்லது ஒரு நாளோ சாப்பிடாமல் பட்டினி இருந்தால் இறந்து விடமாட்டோம் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்த விடயம் தான். ஆகவே, பட்டினி என்றால் என்ன? இப்படி பட்டினி இருந்தால் நம்மால் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதும் அந்நேரம் நமது உடலில் என்னவெல்லாம் நடைபெறுகிறது என்று தெரியுமா?

மருத்துவ ரீதியில் பார்த்தால் பட்டினி இருப்பது என்பது வேறு ஒன்றும் இல்லை. நமது உடலுக்கு தேவையான கலோரி (கனலி, calorie) மற்றும்  ஊட்டக்கூறு (nutrient) குறைபாடு ஏற்படும் போது, அதை பட்டினி இருப்பது என்கிறோம். இப்படி பட்டினி இருக்கும் போது உடலுக்கு தேவையான உணவை முற்றிலும் கொடுக்காமல் விட்டால், அதன் விளைவு கடைசியில் இறப்பு தான். ஆனால், உங்கள் எல்லோருக்குமே தெரியும் சும்மா 1-2 நாட்கள் சாப்பிடாமல் விட்டதும் நாம் இறந்து விட மாட்டோம். அப்படி விரைவில் இறந்து விடுவோம் என்றால் நமது மனித இனமே இன்று வரை உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

உணவை விட நாம் உயிர்வாழ்வதற்கு வேறு அத்தியாவசியமானவை இருக்கின்றன. உதாரணத்திற்கு பிராணவாயு (oxygen) இல்லாமல் நம்மால் ஏறத்தாழ 5-10 நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். இதுவே நீர் அருந்தாமல் ஒரு சில நாட்கள் (2-7 நாட்கள்) உயிர் வாழ முடியும். ஆனால், உணவு இல்லாமல் நம்மால் (சூழ்நிலையைப் பொறுத்து = நோய் இல்லாத, ஆரோக்கியமான உடல் என்றால்) இரண்டு மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்! நம்பவே முடியவில்லை அல்லவா? சரி, இப்படி தொடர்ந்து உண்ணாமல் பட்டினி இருக்கும் நேரம் நமது உடலில் என்னவெல்லாம் நடைபெறுகிறது என்று பார்ப்போமா?

உணவு அருந்தாமல் இருக்கும் போது நமது உடல் மூன்று கட்டங்களைக் கடக்கின்றது. முதலாவது கட்டத்தில் நமது உடல் அதற்கு தேவையான சக்தியை எப்போதுமே கடைசியாக சாப்பிட்ட உணவில் காணப்படும் குளுக்கோஸ் (glucose) ஊடாகப் பெறுகிறது.  இதற்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. குளுக்கோஸ் மூலமாகத்தான் நமது உடல் மிக இலகுவான வழியில்  சக்தியைப் பெறுகிறது. இந்த குளுக்கோஸ் பொதுவாக கிளைக்கோசன் (glycogen) எனப்படும் மூலக்கூற்றை (molecule) உடைத்து உருவாக்கப்படுகிறது. நமது மூளை ஒழுங்காக வேலை செய்வதற்கு ஒரு நாளில் நமது உடலுக்கு தேவைப்படுகிற சக்தியில் 25 சதவீதமான சக்தியை நமது மூளை மட்டுமே உபயோகிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நமது மூளைக்கு 120 கிராம் குளுக்கோஸ் தேவைப் படுகிறது.

நமது உடலில் காணப்படும் குளுக்கோஸ் முற்றிலும் முடிவடைந்ததும் நமக்கு பசி ஆரம்பித்துவிடும். பசி வந்தும் நாம் உணவு அருந்தாமல் இருந்தால் அடுத்ததாக இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிவிடும். இந்த கட்டத்தில் நமது உடல் glycerolipids எனப்படும் கொழுமியத்தை (lipid) உடைத்து கிளிசரால் (glycorol) மற்றும் கொழுப்பு அமிலத்தை (fatty acids) உருவாக்கத் தொடங்கிவிடும். முதலில் கிளிசரால் ஊடாக மேலும் குளுக்கோஸ் உருவாக்கப்படுகின்றன. கிளிசரால் முற்றிலும் முடிந்ததும் நமது ஈரல் கொழுப்பு அமிலங்களை ketone bodies எனப்படும் உயிர்வேதியியல் பொருளாக மாற்றிவிட்டு ketosis எனப்படும் செயல்பாட்டை ஆரம்பித்துவிடும். இந்த ketosis நடைபெறும் நேரம் குளுக்கோஸ்க்கு பதிலாக ketone bodies இல் இருந்து தான் நமது உடல் சக்தியைப் பெறுகிறது. இப்படி இந்த இரண்டாவது கட்டத்தில் மூளை, இருதயம் போன்ற முக்கிய உடல் உறுப்புகளுக்கு சக்தி செல்கிறது. இந்த காலகட்டத்திலும் உணவு அருந்தாமல் இருந்தால் ketone bodies உடன் நமது உடல் ஒரு சில நாட்கள் இருந்து கொஞ்ச கிழமைகள் வரை உயிர் வாழ முயற்சிக்கும். அதற்கும் காரணம் நமது மூளை தான்! உணவு இல்லை என்று தெரியவந்ததும் நமது மூளை தனது குளுக்கோஸ் பாவனையைக் குறைத்துவிடுகிறது. ஒரு நாளில் 120 கிராம் குளுக்கோஸ் பாவித்த மூளை 30 கிராம் குளுக்கோஸ் மட்டுமே பாவிக்கத் தொடங்கிவிடும். ஆனால், இந்த கட்டத்தில் நமது உடலும் மிகவும் பலவீனமாகிவிடும்.

அனைத்து ketone bodies உம் முற்றிலும் முடிந்துவிட்டதும் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் ஆரம்பித்துவிடும். இதில் நமது தசைகளில் காணப்படும் புரதங்களை உடைத்து அமினோ அமிலங்கள் (aminoacids) மூலம் நமது உடல் சக்தியைப் பெறுகிறது. இந்த கட்டத்தில் நமது தசைகள் மெலியத் தொடங்கி விடுகின்றன. இதற்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதா?! நமது உடல் தன்னைத் தானே உண்கிறது!! இப்படி தசைகள் மெலிந்து போகும்போது ஒரு நேரத்தில் நமது இருதயம் தனது செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டும் இல்லை, மேலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒரு சிறிய நோய் வந்தால் கூட அதன் விளைவு விபரீதமாக இருந்துவிடும்.

இப்போ உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் நமது உடல் இயற்கையின் ஓர் மாபெரும் அதிசயம் என்று. உணவு இல்லாமல் போனால் அதற்கு ஒரு Backup Plan மட்டும் இல்லை, மூன்று Backup Plans வைத்திருக்கிறது நமது உடல்!

பட்டினி இருந்து உடல் எடையை குறைக்கலாம் என்பது உண்மை தான். ஆனால், அப்படி மெலிவது உங்கள் உடலுக்கு ஆரோக்கியமற்றது! சத்துள்ள உணவு உண்டு உடற்பயிற்சி செய்தாலே போதும், சும்மா Top Model போல் உங்கள் உடல் வந்துவிடும். ஆனால் அதற்கு பொறுமை தேவை…! இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

How long can someone survive without food?


You may answer if someone asks you, “What did you eat today”? But what will be your reply if someone asks you, “Why did you eat”? Some may say they were hungry or to get energy. Others may say they would die if they didn’t eat. But we all know that we won’t die if we don’t eat for a day. So, what is actually the process of fasting? How long can we survive while fasting and what happens in our body while fasting?

Medically speaking fasting is when the intake of necessary calories and nutrients are greatly reduced. If fasting leads to complete starvation, the ultimate result is death. But we all know that we won’t die if we don’t eat for 1 or 2 days. If not so, the human race would have been extinct long before. There are other important things for survival besides food. For example, without oxygen we can only live for 5 to 10 minutes. We can survive for few days (2 -7 days) without water. But, one (a perfectly healthy person) can live for 2 months without food. Isn’t this unbelievable? Let us see what happens in our body during starvation. Our body passes through 3 stages. First stage is when the body derives its energy from the glucose present in last meal eaten. This glucose is obtained by degradation of a complex molecule called glycogen. About 25% of total energy is utilized by the brain. Thus the brain requires 120g of glucose per day.

When glucose gets depleted, we begin to feel hungry. When we don’t eat, then our body enters the next stage during which there is degradation of a lipid called glycerolipid to glycerol and fatty acids. Initially glycerol is used to synthesis glucose. When the glycerol gets depleted our body converts the fatty acid in liver to ketone bodies and begins the process called ketosis. During this process our body derives energy from these ketone bodies instead of glucose. In this way, the heart, brain and other important organs receive energy in the 2nd stage.

When we fail to take food during this stage, our body tries to survive on ketone bodies for few days. The reason behind it is the brain. Our brain senses the lack of food and reduces its consumption of glucose from 120 g/day to 30g/day. But our body begins to weaken.  Our body enters the 3rd and last stage when all the ketone bodies get depleted. In this stage, our body breaks down the muscle protein into amino acids and derives the energy from it. Our muscles begin to reduce in size. Do you realize what is going on here? The body is feeding on itself. When muscles atrophy, the heart stops to function at some point of time. Also, our immune system gets affected which leads to serious complications even in simple diseases.

Don’t you realize how wonderful our human body is? Our body has not 1 but 3 backup plans when there is no food available. It is true that you can lose weight by starvation. But it is not a healthy practice. You can get great physique by taking good nutritious food and doing regular exercise. All you need is a bit of patience. Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Jayzain | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

141 Comments

  • rajasekar - 11/14/2014, 12:42 PM

    arumai

  • SV Kumar - 10/04/2014, 4:30 PM

    Useful information about our body system

  • kala - 10/02/2014, 8:09 PM

    Very nice

  • HuthaAhmed - 10/02/2014, 2:35 PM

    பயனுள்ள தகவல்

  • fasmina - 10/02/2014, 2:28 PM

    Thanks for the information really
    useful.

  • selvam - 10/02/2014, 2:14 PM

    Super

  • Mowli Sri AK - 09/09/2014, 2:55 PM

    Oh superb

  • Tamilmani Kamalanathan - 09/06/2014, 7:36 PM

    அருமையான தகவல்.

  • Bakkiya Nathan - 09/06/2014, 2:22 PM

    Arivu virunthu

  • Fairoz Parveen - 09/06/2014, 1:43 PM

    Ji purunchudha

  • Priya Hema - 09/06/2014, 10:56 AM

    Super good msg

  • Samy Durairaj - 09/06/2014, 9:22 AM

    Good message

  • வெங்கடேஸ் வரன் - 09/06/2014, 4:00 AM

    Good

  • Madan Mohanv - 09/05/2014, 9:06 PM

    Super

  • Subashini Shanmugalingam - 09/05/2014, 9:04 PM

    Merci

  • Praba Jayram - 09/05/2014, 8:33 PM

    அருமை!

  • Sigamani Deiva - 09/05/2014, 6:29 PM

    Great news…. Thanks sir…

  • Sathya Manickam - 09/05/2014, 5:25 PM

    Super……

  • Kasimutharayar Mutharayar - 09/05/2014, 4:23 PM

    super

  • Sakthivel Sakthivel - 09/05/2014, 3:48 PM

    Super

  • Krishmadhu Krish - 09/05/2014, 3:44 PM

    I very useful message

  • ச.கண்ணதாசன் திமுக கொளப்பாக்கம் - 09/05/2014, 3:33 PM

    Thanks

  • Prabhu Moongilmada - 09/05/2014, 3:31 PM

    Super

  • Saravana Kumar Rengasamy - 09/05/2014, 3:23 PM

    Dana

  • Shibu Anand - 09/05/2014, 3:19 PM

    Good message to the ppl fr those who want to maintain their body physically and also post some tips to maintain our mental health like meditation,relaxin etc… Nyway good job guys