Natural Sciences Read in english

புகைபிடிக்காமல் நீண்ட ஆயுளைப் பெறலாம்

By Niroshan Thillainathan on May 1st, 2014

புகைபிடிக்காமல் நீண்ட ஆயுளைப் பெறலாம்புகைபிடிக்கும் பழக்கம் ஒரு சராசரி மனிதனின் ஆயுளைக் குறைக்கின்றது! இவ்விடயம் உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த ஒரு உண்மை மட்டும் அல்லாமல், இது மேலும் பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, புகைபிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், புகைபிடிப்பவர்கள் இப்பழக்கத்தைத் தாமதமாகக் கைவிட்டாலும் கூட, அவர்கள் தங்களின் ஆயுளை நீடிக்க இயலும் என்பதே தான். ஆஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜப்பான், ஃப்ரான்ஸ், ஸ்பெயின், மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட புகைபிடிப்பவர்கள், 3 முதல் 50 ஆண்டுகள் வரைக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் அறுபது வயதைத் தாண்டி புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்களின் ஆயுள் காலம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. புகைபிடிப்பவர்கள் பலர் “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு” என்பது போல், இவ்வளவு காலம் புகைத்த நாம் இனி இதனைக் கைவிட்டால் ஒரு பலனும் கிடையாது என்கிற கருத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்தக் கருத்தே தவறானது என்பதை விளக்க இந்த ஆய்வின் முடிவுகள் உதவுகின்றன.

எனவே நண்பர்களே, புகைபிடிப்பதைக் கை விடுவதற்கு நேர காலம் ஒன்றுமே இல்லை! நீங்கள் புகைக்கும் பழக்கத்தைக் இன்று கூட கைவிட்டாலும், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது நிச்சயம்! இந்தத் தகவலைக் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். மேலும் இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Health benefits of stopping smoking


Smoking reduces the life span of an average human being! This fact is not only known to almost everyone of us, but has also been proved scientifically in many researches. But a recent research has reported good news for the smokers all over the world. The smokers have a chance to increase their lifetime if they quit smoking. In this research, which was conducted in 7 countries including Australia, China, England, Japan, France, Spain and America, the smokers were observed for 3 to 50 years. It has been found that the lifetime of those who have quit smoke after 60 years of age has increased by 49%. Most of the smokers think that there is no use in quitting when all the damages have been done already. But, this research has proved that this opinion is totally wrong.

Dear friends! There is no right time to quit smoking than now! Your lifetime can be increased even if you quit smoking today! Share this valuable information with your friends. Post your comments below.


Tomasz Steifer, Gdansk, | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

5 Comments

  • parthipan - 12/21/2014, 4:50 AM

    அருமையான பதிவு சுப்பர் நண்பா

  • Sudharsan - 10/31/2014, 5:17 PM

    So, till 60 years of age smoking is allowed

  • N.RAMESH - 10/31/2014, 1:56 PM

    live it today

  • Samsu Raj - 05/01/2014, 8:38 PM

    supar

  • Harry Krish - 05/01/2014, 3:39 PM

    nice information