Natural Sciences Read in english

கூமுட்டையில் உள்ள மருத்துவம்

By Niroshan Thillainathan on April 24th, 2014

கூமுட்டையில் உள்ள மருத்துவம்உயர் இரத்த அழுத்தம் இன்று பலரின் உயிரைப் பறிக்கும் உயிர் கொல்லி நோய் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்த ஓர் விடயம் ஆகும். இந்த நோயைத் தடுக்க மருத்துவத் துறையில் பலவகையான வைத்திய முறைகளைத் தருவதற்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் “கூமுட்டை” என்று அழைக்கப்படும் அழுகிய முட்டை, உயர் இரத்த அழுத்த நோயைத் தடுக்க உதவும் எனும் விடயத்தைக் கண்டு பிடித்துள்ளனர். அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் (Hydrogen Sulphide) வாயு, மனித இரத்த நாளங்களைத் தளர்வாக்கி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் ஒரு வருட காலம், எலிகளைக் கொண்டு இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையைக் கண்டறிந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தத் தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு, தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தைக் கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

சரி நண்பர்களே, இந்த ஆராய்ச்சி கடைசியில் எங்கே முடிகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே. எதிர்காலத்தில் கூமுட்டை மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருந்தால், அதை இட்டு நீங்கள் ஆச்சரியப் படாதீர்கள்!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Health benefits of rotten eggs


We all know that hypertension is a killer disease which takes away so many lives. Doctors and Scientists are trying to develop various treatment methods to prevent this disease. The scientists in the Lakehead University, Canada, have found that rotten eggs have the ability to prevent hypertension. The senior scientists in this university Dr.Rui Wang and Dr. Salamon have stated in their report that the hydrogen sulphide present in the rotten eggs relax the blood vessels and thus regulate the blood flow. They say that they have found this fact after rigorous research on mice for over a year. So they have suggested that the new rotten egg treatment can be followed instead of other modalities of treatment.

Let us all wait and watch where this research takes us. Don’t be surprised if you find rotten eggs in hospitals in the near future.

Did you enjoy reading this Arivu Dose? Post your comments below!


www.volganet.ru | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.