Natural Sciences Read in english

மருத்துவ குணங்கள் நிரம்பிய முருங்கைக் கீரை

By Niroshan Thillainathan on May 5th, 2014

மருத்துவ குணங்கள் நிரம்பிய முருங்கைக் கீரைMoringa Oleifera என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய முருங்கைக் கீரை, பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை அறிவியல் ரீதியாக மேலை நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், முருங்கைக் கீரையின் சாறு 97 சதவீத கணைய புற்றுநோய் அணுக்களை (Pancreatic Cancer cells) வெறும் 72 மணி நேரத்தில் கொல்லும் தன்மை வாய்ந்தது எனும் விடயம் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா, கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் பிரசித்துப் பெற்ற முருங்கைக்கீரை, இயற்கையாக இந்தியாவில் தான் அதிகளவில் விளைகின்றது. ஒரு வேளை இதனால் தான் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் கணைய புற்றுநோய்க்கு (pancreatic cancer) பலியாகும் மக்களின் எண்ணிக்கை 84 சதவீதம் குறைவாக இருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து, கருப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மற்றும் “மெலனோமா” (melanoma) ஆகிய நோய்களை எதிர்க்கும் தன்மையும் முருங்கைக்கீரைக்கு உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இறுதியாக, ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக உபயோகத்திலிருக்கும் முருங்கைக்கீரை, கிருமிநாசினியாகச் செயல்படுவதோடு மட்டுமின்றி நீரழிவு நோயையும் தடுக்க வல்லது.

எனவே, மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த அதிசயக் கீரையை நாள்தோறும் நம் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழலாம்! என்ன நண்பர்களே, நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை முறை இக்கீரை வகையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Health benefits of moringa oleifera


Do you know that the Drumstick leaves which are scientifically called as Moringa oleifera has various medicinal properties? The scientists of western countries have proved this fact. Recent studies have found that the juice of these leaves have the ability to destroy 97% of pancreatic cancer cells in about 72 hours. The drumstick leaves which are popular in Southeast Asia, Oceania, Caribbean and South American regions are found most abundantly in India. This may be the reason for 84% low incidence of pancreatic cancer among the Indian population than the South American population. The scientists have also found that these leaves have the ability to fight against uterine cancer, Hepatic cell carcinoma, lung cancer and Melanoma. Last but not the least, this age old popular Ayurvedic herb not only acts as a disinfectant but also as an effective preventer of Diabetes mellitus.

So, Let us all add these medicinally valuable herbs and greens to our daily meals and have a long and healthy life! How many times a week, do you use Moringa leaves in your diet? Post your comments below.


Sengai Podhuvan | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Mahendraselvan D. - 11/04/2014, 8:26 PM

    முருங்கைக்கீரையில்தான் எல்லா கீரைகளை விடவும் அதிகமான இரும்புச்சத்து உள்ளது.

  • Devan - 09/04/2014, 2:53 PM

    Very useful. Thank you