Future Sciences Read in english

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய தொடுவில்

By Niroshan Thillainathan on February 13th, 2014

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உதவக்கூடிய தொடுவில்உங்களுக்கு ஒன்று தெரியுமா? 2013இல் உலகில் வாழ்ந்த மனிதர்களில் 371.000.000 மக்களுக்கு நீரிழிவு நோய் (diabetes) இருந்தது. அப்படி என்றால் ஒவ்வொரு 19 ஆவது நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதுவே 2035 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 592.000.000கு அதிகரித்துவிடும் என்று எண்ணப்படுகிறது. பொதுவாக வழக்கத்திற்கு மாறான ஆராய்ச்சியில் ஈடுபடும் Google நிறுவனத்தின் Google Lab எனப்படும் ஆராய்ச்சி மையம், இந்த கவலைக்கு இடமான நிலையை அறிந்ததும் இதற்கு ஏதாவது வழி பண்ணவேண்டும் என்று ஒரு புதிதான ஆராய்ச்சியை ஆரம்பித்து உள்ளனர்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் குருதிச் சர்க்கரை அளவை (blood sugar level) அளப்பதற்கு உதவக்கூடிய தொடுவில் (contact lense) ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . தற்போது ஆராய்ச்சியில் இருக்கும் இந்த தொடுவில் ஒவ்வொரு நொடியும் நமது கண்ணீரில் காணப்படும் குளுக்கோஸ் நிலையை அளக்க உதவுகிறது. அதற்கு அவர்கள் ஒரு மிகச் சிறிய மெல்லிய வயர்லெஸ் சிப் (wireless chip) மற்றும் குளுக்கோஸ் சென்சார் (glucose sensor) ஒன்றை அந்தத் தொடுவில்லில் பதித்துள்ளனர். அடுத்த கட்டமாக அவர்கள் அதே தொடுவில்லில் சின்னஞ்சிறிய ஒளி விளக்குகளை பொருத்துவதற்கு முயற்சிக்கின்றனர். குருதிச் சர்க்கரை அளவு ஓர் குறிப்பிட்ட நிலையை விட அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது அந்த ஒளி விளக்குகள் ஊடாக அந்த நபருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, அவர் உடனடியாக அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த ஆராய்ச்சி மிகவும் பலன் தரும் என்று Google நிறுவனம் கருதுகிறது.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? இப்படி ஒரு தொடுவில் பிரியோசனமாக இருக்குமா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிடுங்கள்!


English Version

Google Smart Contact Lenses for Diabetics


Do you know the scary fact that in 2013, 371,000,000 people of the world’s population were affected by Diabetes Mellitus? It means that every 19th person is affected by this disease. This count would have increased to 592,000,000 in 2035. The Google Labs, the research center of Google Corporation, which is famous for their unique researches, has taken a step to identify a solution to this problem. They have started a research to create a contact lens which can measure the blood sugar level of the Diabetic patients.

This contact lens in its experimental stage is capable of measuring the glucose level in the tears. They have incorporated a wireless chip and a glucose chip in this contact lens. Efforts are being taken to incorporate small lights in this contact lens. When the glucose level of the person rises above or falls below a critical level, this light will be a warning signal to the patient to take appropriate treatment. Google Corporation expects it to be a great benefit to the Diabetic patients.

Are you a Diabetic patient and do you think that such a contact lens will be of use to you? Post your comments below.


Google

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

25 Comments

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 08/01/2014, 1:55 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Sabari Sabagare Senthil Nathan Siva Prakash Tamil Krish Naga Ranga Sheik Davood Tsb Victor Shanmugavel Velmurugan Jagthish Jaga Prabhu Santhosh Stalin Muthupandi Balu Balu Vijay Raghavan Kannan Rajagopalan Tharmilan Kajan Karthi Kumar Laxmanshyam Shyam Arul Prakash Tamizh Arasan Nagarajan Naga Kalai Selvan Suresh Vishwa Be Happy Aalways Mariesh Vishnu Prabu Madan Dharma M Karuna Dharmendrakumar

 • Naga Ranga - 07/27/2014, 11:47 AM

  Sure…

 • Dharma M Karuna Dharmendrakumar - 07/27/2014, 11:13 AM

  Aha super anna

 • Sheik Davood - 07/27/2014, 10:24 AM

  கூகுளின் நல்ல முயற்சி.அவசியம் அனைவருக்குமே தேவைதான்.

 • Tsb Victor - 07/27/2014, 9:50 AM

  Google allways like god. Because Google know everything.

 • Jagthish Jaga - 07/27/2014, 9:11 AM

  super

 • Sabari Sabagare - 07/27/2014, 8:40 AM

  Its not Good. Eat Healthy food items add vegetables and Sleep well. Dont move into the Artificial world.

 • Prabhu Santhosh - 07/27/2014, 8:01 AM

  Nice

 • Stalin Muthupandi - 07/27/2014, 7:11 AM

  Nallathe ninaipom nallathe nadakkum.

 • Balu Balu - 07/27/2014, 7:08 AM

  Good info

 • Vijay Raghavan - 07/27/2014, 6:19 AM

  It’s great

 • Kannan Rajagopalan - 07/27/2014, 6:11 AM

  Prevention is better than cure. If v know our blood sugar, v can be cautious.

 • Tharmilan Kajan - 07/27/2014, 5:43 AM

  Rempa nalla vidayam.

 • Karthi Kumar - 07/27/2014, 5:29 AM

  Well done!!!

 • Laxmanshyam Shyam - 07/27/2014, 4:45 AM

  Good

 • Arul Prakash - 07/27/2014, 4:40 AM

  Thevaiyana Kandupidippu

 • Tamizh Arasan - 07/27/2014, 4:37 AM

  We hav to search for avoid or prevent diabetis

 • Nagarajan Naga - 07/27/2014, 2:07 AM

  Nice

 • Kalai Selvan - 07/26/2014, 2:50 PM

  Good.

 • Suresh Vishwa - 07/25/2014, 7:00 PM

  Fine product

 • Siva Prakash - 07/25/2014, 6:08 PM

  Good invention!

 • Be Happy Aalways - 07/25/2014, 2:09 PM

  nice

 • Tamil Krish - 07/25/2014, 1:10 PM

  kandipaga ithu use aagum

 • Mariesh Vishnu - 07/25/2014, 1:08 PM

  great info bro

 • Prabu Madan - 07/25/2014, 1:07 PM

  Very interesting… Pa