Natural Sciences Read in english

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்

By Niroshan Thillainathan on May 10th, 2014

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ நாம் பின்பற்ற வேண்டிய உணவு முறையைப் பற்றி வியப்பூட்டும் ஒரு தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர். குறைந்த அளவு மாவுச்சத்தையும் (carbohydrate) அதிக அளவு புரதச் சத்தையும் (protein) உட்கொண்டு வந்தோமென்றால், ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம் என்பதைத் தான் மருத்துவர்கள் நமக்குக் கூறக் கேட்டிருப்போம். ஆனால், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சிலரோ இதற்கு மாற்றுக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ அதிகளவு மாவுச்சத்தையும் குறைந்தளவு புரதச் சத்தையும் உட்கொள்ள வேண்டும் என இவர்கள் தங்களின் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர்.  858 எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் புரதம், மாவுச்சத்து, மற்றும் வேறு சத்துகளின் வெவ்வேறு கலவையளவிலான 25 வகை உணவுகள் எலிகளுக்குக் கொடுக்கப்பட்டன. இதில் ஆகக் குறைந்த, அதாவது 5-15% அளவிலான புரதத்தை உட்கொண்ட எலிகள் 150 வாரங்கள் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்தன, மாறாக 40-60% புரதத்தை உட்கொண்ட எலிகளோ 100 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தன. எனவே, அதிக புரதத்தை உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவான உணவு முறைக்கு முரண் கருத்தைத் தெரிவித்திருக்கும் இவர்கள், இதனை நிலையானக் கருத்தாக்கத் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சரி, பொறுத்திருந்து பார்ப்போமே…


English Version

Foods for a long and healthy life


Recently, some of the Australian researchers have released interesting information about the food habits to be followed to have a long and a healthy life. We have heard Doctors say that low carbohydrate and high protein diet can help us live a long and a healthy life. But these researchers have contradicted this statement. They have found in their research that, diet with high carbohydrate and low protein diet is the key to a long life. This research was conducted on 858 mice in which 25 types of mixed diet with varying proportion of protein, carbohydrate and other nutrients were fed to them. In this research, the mice which were fed with 5 to 15% of protein lived for about 150 weeks while those fed on 40 – 60% protein survived only for 100 weeks. The researchers have warned that high protein intake may lead to cancer. They are working on this contradiction to normal belief, to prove it further. Let us wait and watch how it turns out.


Wikipedia | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.