Natural Sciences Read in english

குரலை உயர்த்தி ஆரவாரம் செய்யும் மீன்கள்

By Niroshan Thillainathan on May 7th, 2014

குரலை உயர்த்தி ஆரவாரம் செய்யும் மீன்கள்மனிதர்களால் மட்டுமே ஒருவருடன் உரையாடும் பொழுது குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியும் என்பது தவறான ஒரு விடயம் ஆகும் தெரியுமா? அது ஏனென்றால், மீன்களால் கூட இவ்வாறு செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சமீபத்தில் சில “blacktail shiners” வகை மீன்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த வியப்பூட்டும் விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன்களைப் பிடித்து ஒரு தொட்டிக்குள் அடைத்தப் பின்னர் மீன்பிடி உயிரியல் ஆய்வாளர்கள் எவ்வாறு சத்தமான சூழ்நிலை மீன்களின் தொடர்பு முறையைப் பாதிக்கின்றது என்பதை அறிய முயன்றனர். அதற்கு, அத்தொட்டியின் அடியில் ஒலிப்பெருக்கியைப் பொருத்தினர். சில நாட்களில் பெண் இன மீன் எவ்வித ஒலியையும் எழுப்பவில்லை என்றாலும், ஆண் இன மீன் இரண்டு வகையான ஒலிகளை எழுப்பின. முதல் வகை ஒலி பூனையின் மெல்லிய கத்தலின் ஒலி போன்றும், இரண்டாம் வகை சற்று பலமாக ஒரு பொருளை மோதும் ஒலி போன்றும் இருந்ததாக இவர்கள் கூறினர். முதல் வகை ஒலி, ஆண் மீன் பெண் மீனைக் கவர்வதற்காகவும், இரண்டாம் வகை ஒலி மற்றொரு ஆண் மீனுடன் தன் இருப்பிடத்திற்காகவோ, துணைக்காகவோ சண்டையிடும் பொழுது எழுப்புவதாக ஆய்வாளர்கள் கூறினர். பின்னர் ஒலிபெருக்கியை அகற்றிவிட்டு அமைதியான சூழலை அமைத்த பொழுது, மீன்கள் எவ்வித ஒலியையும் எழுப்பாமல் சமரசமான முறையில் உரையாடுவது போன்று உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, சூழ்நிலை கடுமையாகும் பொழுது மீன்களும் மனிதர்களைப் போல் ஆரவாரம் செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது சுவாரசியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Fishes can raise their voice to shout


It is not true that human beings are the only ones to raise their voice during an excited conversation. Scientists have found that even fishes do the same. This surprising fact has been found in a recent research conducted on the ‘Black shiners’ fishes. The Biologists put these fishes in captive and tried to study the effects of loud noise in their way of communication. They fixed a loud speaker in the bottom of the tank. After a few days, the female fishes didn’t make any noise. But the male fishes started to make 2 different types of noises. The Biologists say that the first sound was like a weak meow of a cat while the second sound was similar to something hitting a heavy object. They say that the first sound is a mating call to the female fishes while the second sound is a warning to other male fishes regarding their territory or mates. The Biologists say that these fishes did not make any noise and were communicating through silent conversations when the loud speaker was removed. Thus they have come to the conclusion that fishes also make noise in excitement, like people, when they are put in a tough situation.

Isn’t it an amazing fact? Post your comments about this Arivu Dose.


Brocken Inaglory | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • Gowtham - 11/06/2014, 1:04 PM

    Useful new news