Natural Sciences Read in english

உடலின் திசுக்களை எலும்புகளாக மாற்றும் நோய்

By Niroshan Thillainathan on October 26th, 2014

உடலின் திசுக்களை எலும்புகளாக மாற்றும் நோய்“Fibrodysplasia ossificans progressiva” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் தான் திசுக்களைக் கூட எலும்புகளாய் மாற்றும் மாயத்தினைச் செய்கிறது. இதனை “Stone Man Syndrome” எனவும் அழைக்கின்றனர். இதை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா? அப்படியென்றால் கட்டாயம் இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை, தசைநாண்கள், தசைநார்கள் போன்றவை எலும்புகளாய் வளருமாம். இதற்கான அறிகுறிகள் சிறு வயதிலே ஏற்படத் தொடங்கும். உருவமற்ற வடிவில் கால் இருத்தல், வீக்கம் விரைவில் தோன்றி மறைதல் மற்றும் மூட்டுகளில் சிவப்பு நிறம் ஏற்படுதல் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலுக்குள்ளேயே தேவையற்ற இடங்களில் எலும்புகள் வளரத் தொடங்கும், அது மட்டுமின்றி அவை உண்மையான உடல் எலும்புகளுடன் ஒன்றாகிவிடக்கூடும். எலும்பாக இவை உருவாவதால் அவற்றை நீக்குவது என்பது முடியாத காரியமாகிவிடுகிறது.

அதிர்ஷடவசமாக இந்த நோய் பரவலாகத் தென்படுவது இல்லை. 2 மில்லியன் மக்களில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற நோய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதைக் கண்டறிவது மிகவும் அரிது என்பதால் இது மேலும் பிரச்சனைக்குரிய நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்ட 500 பேரிடம் எடுக்கப்பட்ட டி.என்.ஏ, இரத்தம் மற்றும் பற்களின் மாதிரி போன்றவற்றில் இருந்து இதற்கு ஒரு தீர்வு காணலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த நோய் பற்றி நீங்கள் முன்பே அறிந்துள்ளீர்களா, நண்பர்களே? உங்கள் பதிலையும் மற்றும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Fibrodysplasia Ossificans Progressiva - Tissue turns to Bone


Fibrodysplasia ossificans is the disease which converts the tissues in the body to bones. It is also known as “Stone Man syndrome”. Haven’t you heard about it? Then you should read this Arivu Dose till the end.

The myofibrils, muscle bundle and the muscles of these patients will get converted to bones. The symptoms of this syndrome begin at an early age. The symptoms are deformed legs, on and off swellings and red color rashes on the joints. The people affected by this syndrome have bones grown in uncommon sites in their body. Also, these extra bones may fuse with the normal bones of the body. This makes it impossible to remove them.

Fortunately, this syndrome is not a common disease. It occurs in one in 2 million people. The difficulty in diagnosing the disease makes it more problematic. Researchers believe that, a solution to this disease can be found out by studying the DNA, blood samples and dental samples from 500 patients affected by this syndrome.

Did you know about this disease already? Post your replies and comments about this Arivu Dose below.


Joh-co | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.