Natural Sciences Read in english

முப்பத்தைந்து வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கும் நரம்பணுக்கள்

By Niroshan Thillainathan on May 24th, 2014

முப்பத்தைந்து வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கும் நரம்பணுக்கள்ஒரு மனிதனின் மூளைத்திறன் அவனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சார்ந்திருக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமாக இருப்பது உங்கள் உயிர்நிலை உறுப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 1.5 கிலோ எடையுள்ள மனித மூளை இயற்கையின் படைப்பில் உருவான ஒரு அற்புதமே. இந்த விஞ்ஞான யுகத்தின் தலை சிறந்த படைப்பான, மிகச்சிறந்த தொழில்நுட்பத்தால் உருவான மீத்திறன் கணினி (Super Computer) கூட, மிக நுண்ணிய நரம்பணுக்களால் ஆன நம் மூளையின் சிந்திப்பு, அறிவாற்றல் மற்றும் படைப்புத்திறன் ஆகியவற்றை நெருங்கக் கூட முடியாது என்றால் அது எவ்வளவு பெரிய அதிசயம்! மனித மூளையானது வெளி உலகத்தின் தொடர்புகளைக் கொண்டு வளர்ச்சி அடையும் ஒரு அறிவார்ந்த உறுப்பு. இருந்தாலும், வயது முதிர்ச்சி அடைந்ததும் வரும் நோய்களின் காரணமாக, உதாரணத்திற்கு அறிவாற்றல் குறைப்பாடு, மனம் மற்றும் உடல் நலக் கோளாறு போன்ற நோய்களால் மூளையின் செயல்பாட்டுத் திறன் குறைந்துவிடுகிறது.

முப்பத்தைந்து வயதை எட்டிய ஒவ்வருவரும், தினசரி சுமார் 7000 நரம்பணுக்களை (மூளை உயிரணுக்கள்) இழந்து கொண்டே வருகின்றனர். இதைத் தடுக்கவும் வழியில்லை; இழந்த அணுக்களை நிரப்பவும் வழியில்லை. மனித மூளை சுமார் 100 பில்லியன் நரம்பணுக்களால் ஆனது. இந்த 100 பில்லியன் நரம்பணுக்களும் மற்றொரு 1000 முதல் 10,000 நரம்பணுக்களில் இணைக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இலகுவான கணித முறைகளுடன் உங்கள் நரம்பணுக்கள் அனைத்தும் எப்பொழுது முற்றிலும் தீரும் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Facts about the degeneration of neurons


The ability of a human brain depends on the physical and mental health. Reducing the mental stress and being happy will protect your health. The brain which weighs about 1.5kg is a wonderful creation of nature. It is a great wonder that the best invention in this scientific era, the super computer, cannot compete with our human brain in thought process, intelligence and creativity! Human brain is an intelligent organ which develops based on its connection with the external environment. But, due to diseases of the aged, like slow mentation and other mental and physical illness, reduces the functionality of the brain.

Everyone who has reached the age of 35 loses around 7000 neurons per day. This cannot be prevented. There is no way to replace the lost neurons. Our human brain has approximately 100 billion neurons. These 100 billion neurons are connected to other 1000 or 10,000 neurons.

So, estimate when you will lose all your neurons. Did you like this interesting information? Post your comments below.


Gaetan Lee | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

14 Comments

  • m.m rizwan - 10/09/2014, 6:23 PM

    good efforts

    friend!

  • PAVI THINGALUR - 09/08/2014, 4:59 AM

    Thanks for your information (God is Great)

  • rajarajan - 08/22/2014, 7:58 AM

    Super nanba

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 05/27/2014, 2:11 PM

    உங்கள் கருத்துகளைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை இவ்வாறு சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே Karuppu Roja Shiva Kumar Nixon Edward Subramani Mani Gnana Sekar Thala Raj Raj Krish Krishna Sujith Nayagam Tamil Mrt John Arun

  • Shiva Kumar - 05/26/2014, 6:52 PM

    Great

  • Nixon Edward - 05/25/2014, 5:14 PM

    Good message

  • Subramani Mani - 05/25/2014, 12:54 PM

    Ok

  • Gnana Sekar - 05/25/2014, 11:07 AM

    super

  • Thala Raj Raj - 05/25/2014, 9:34 AM

    Super

  • Krish Krishna - 05/25/2014, 6:30 AM

    Thanks for information

  • Sujith Nayagam - 05/25/2014, 5:34 AM

    i like it

  • Tamil Mrt - 05/24/2014, 2:01 PM

    super news

  • Karuppu Roja - 05/24/2014, 1:45 PM

    maaster eanaku thalayea suthura mathiri eruku mastes

  • John Arun - 05/24/2014, 1:41 PM

    Supar and thanks